தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி பிரபலமாக வலம் வருபவர் தான் நடிகை ஹனிரோஸ். இவர் 2005-ம் ஆண்டு, தனது 14 வயதில் "பாய் பிரண்ட்" என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஹனிரோஸ், அதன் பின்னர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த சூழலில், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்த 'வீரசிம்ம ரெட்டி' படத்துக்குப் பிறகு ஆந்திரா மாநிலத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகையாக மாறினார். இவரது நடிப்பு திறமைக்கு திரையுலகில் பெரிய அளவில் அங்கீகாரம் தற்பொழுது வரை கிடைக்காத போதும், அவரது கவர்ச்சி தோற்றமும், ஆளை மயக்கும் ஆடையும் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கி இருக்கிறது. இன்றைக்கு நடிகை ஹனிரோஸ் பேஷன் மற்றும் ஸ்டைலிங்கிற்காகவே இணையதளத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இளம் ரசிகர்கள் மட்டுமன்றி பெண்களும் அவரது ஆடைகளை பார்த்து இணையத்தில் தேடும் வகையில் இருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது ஹனிரோஸ், தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவலாக பரவி வருகிறது.

அதன்படி அவர் பேசுகையில், "உலகத்தில் உண்மையாகவும், அழகாகவும் இருக்கும் ஒரே விஷயம் என்னவென்றால், அது தான் ‘காதல்’. மனித வாழ்க்கை காதல் இல்லாமல் முழுமையடையாது. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கும் அழகான காதல் மலர்ந்தது. ஆனால் இப்போது அந்தக் காதல் இல்லை. நிச்சயமாக என் வாழ்க்கைக்கேற்ற, என்னை உண்மையாக புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்காக இன்றும் காத்திருக்கிறேன். அப்படிப்பட்ட அந்த நபர் என் கண்பார்வையில் விழும் நேரம் வந்துவிட்டால், நான் அவரை கண்டிப்பாக விடமாட்டேன். அப்படி ஒரு உறவை நான் அதிகமாக விரும்புகிறேன். இது நான் சொல்லும் டையலாக்கோ கதையோ அல்ல, இது அனைத்தும் உண்மையான மனநிலையிலிருந்து நான் வெளிப்படுத்தும் எனது காதல் உணர்வுகள்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “லியோவில் என்னை வீணடித்துவிட்டார்” – சஞ்சய்தத்தின் கருத்து விமர்சனத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி..!
இப்படியாக அவர் பேசியிருப்பது காதலின் மீது அவர் வைத்திருக்கும் உண்மை தன்மையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. தொடர்ந்து இவர் பல வணிக நிகழ்ச்சிகளில், கடைகள் திறப்பு விழாக்களில், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வருவதால், ஹனிரோஸ் தற்போதுபலரது பார்வையில் பிரபலமாகவும் இருக்கிறார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், காதலுக்காக காத்திருப்பதாக அவர் கூறியதை கேட்டவுடன் பல இளைஞர்கள் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளனராம்.

இப்படி திரையுலகில் பல முயற்சிகளை மேற்கொண்டு முழுமையான இடம் பிடிக்க வேண்டிய நடிகையாய் வலம் வரும் ஹனிரோஸ் தனது உணர்வுப்பூர்வமான காதல் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தியதால் பலரது கவனத்தையும் தற்பொழுது பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றும் 'ராமாயணம்'..! ரூ.2000 கோடியல்ல அதற்கும் மேல.. பட்ஜெட்டில் புதிய உச்சம்..!