தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், கமர்ஷியல் மற்றும் வரலாற்று சிறப்புடைய கதைகளில் தன்னை சாதனையாளராக நிலைநாட்டியவர் தான் நடிகர் கார்த்தி. தனது தனித்துவமான கதைகளையும், நடிப்பு யுக்தியையும் வைத்து இவர் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் கதைகளும் வித்தியாசமாகவே இருக்கும். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' படத்தை யாராலும் மறக்க முடியாது. இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் கார்த்தியின் நடிப்பிற்காகவே பல பாராட்டுக்கள் குவிந்தது. இப்படி இருக்க, தற்போது அவரது நடிப்பில் உருவாகவிருக்கும் 29-வது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திற்கு, ‘மார்ஷல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'டாணாக்காரன்' படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நம்பிக்கை இயக்குநராக வலம் வரும் இயக்குனர் தமிழ், தற்போது கார்த்தியுடன் கைகோர்க்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 'மார்ஷல்' திரைப்படம், கடல் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் யாரும் பார்த்திராத வகையில் வெவ்வேறு பாணியில் நகரும் அதிரடி படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது தமிழ் சினிமாவில் கடலையும், துறைமுக நகரங்களையும் அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் உருவாகி கொண்டு இருக்கிறது. அந்த ஓட்டத்தில் ‘மார்ஷல்’ படம் ஒரு புது அத்தியாயமாகவும் அமைவதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என பேசப்படுகிறது. இந்தப் படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடி கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவில் அழகு, திறமை, மௌனம் கலந்த பாணியில் வெற்றி பெற்ற கல்யாணியும் இப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "கூலி" படத்தின் "மோனிகா" பாடலுக்கு ஆட்டம் போட ரெடியா..! கவர்ச்சியில் கலக்கும் பூஜா ஹெக்டே.. நடன காட்சி இதோ..!

மேலும், இப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிக்க இருக்கிறாராம். இவர் தமிழில் நெருக்குநேரம், ரிச்சி என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், ஒரு முழுமையான எதிர்மறை வேடத்தில் இவர் நடிப்பது 'மார்ஷல்' மூலமாகத்தான். இதில் சிறப்பு தோற்றமாக நடிகர் நானி-யும் காணப்பட இருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பெருமை வாய்ந்த நடிகரான நானி, இத்தகைய கேமியோ தோற்றத்தில் இணைவது, மக்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தன்னை தொடர்ந்து, இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார் சாய் அபயங்கர். இவர் இசைத்துறையில் விரைவில் முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் சேர வாய்ப்புள்ள கருதப்படுகிறார்.
இவை அனைத்தையும் விட இந்த படத்தை, கைதி, சூல, சர்தார் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனமான "டிரீம் வாரியர் பிக்சர்ஸ்" தான் கார்த்தியின் இந்த ‘மார்ஷல்’ படத்தையும் பிரமாண்ட முறையில் தயாரிக்கிறது. சிறப்பான கதைகளுக்கு மதிப்பளிக்கும் இந்த நிறுவனம், ‘மார்ஷல்’ படத்தைமுழுவேகத்தில் தயாரிக்க உள்ளதாம். தன்படி, ‘மார்ஷல்’ படத்திற்கான புதிய தலைப்பு மற்றும் ப்ரீ-லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, கடலின் பின்னணியில், இருண்ட காட்சிகளை ஒளிரவைக்கும் போலிஸிங் கொண்ட இந்த போஸ்டர், படம் ஒரு தீவிரமான எமோஷனல்-ஆக்ஷன் கதையை கொண்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. மேலும், படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும், இந்த வருட இறுதிக்குள் படம் திரைக்கு வர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி, இயக்குநர் தமிழ், நிவின் பாலி, கல்யாணி பிரியதர்ஷன், நானி என பல நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பரிமாணம் சேர்க்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமா தராத போதையை குடும்பம் தான் கொடுத்தது.. திருமண வாழ்க்கை சவால்கள் நிறைந்தது.. நடிகை விசித்ரா உருக்கம்..!