தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை விசித்ரா. நேர்த்தியான உடை அணிகலன்கள், கூர்மையான அழகு, தைரியமான காட்சிகளிலும் தன்னம்பிக்கையுடன் நடித்ததன் மூலம், ஒரே நேரத்தில் சர்ச்சையும் புகழையும் சந்தித்த பெருமையுடையவர். தனது தனித்துவமான நடிப்பால் பல்வேறு படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களை திறம்ப்பட நடித்துள்ள விசித்ரா, தற்போது திரையுலகில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தனது திருமணத்திற்குப் பின் குடும்பம், குழந்தைகள் என தனது வாழ்க்கையை புதிதாக அமைத்துள்ள அவர் தற்போது தனது மூன்று மகன்கள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழலில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை விசித்ரா, மேடையில் தனது வாழ்க்கையை குறித்து உருக்கமாக பேசியிருந்தார். அவருடைய அந்த பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்களின் மனதை நெருட செய்ததுடன், இணையதள வாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்பொழுது பேசிய விசித்ரா, " 90களில் நான் சினிமாவில் நன்கு நடித்து கொண்டிருந்த காலக்கட்டம். எல்லா இடங்களிலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பும், வி.ஐ.பி. மரியாதையும் எனக்கு கிடைக்கும்.
அந்த நேரத்தில் என் மனதுக்குள் ஒரு பெரிய குழப்பம் இருந்தது என்னவெனில் ‘எனக்கு கண்டிப்பாக திருமணம் ஆகுமா? திருமணம் என்ற பந்தமே வேண்டாமே? சினிமா வாழ்கையிலேயே தொடர்ந்து இருக்கலாமே!’ என்ற எண்ணங்கள் எனக்குள் அதிகமாக இருந்தது. சில சமயங்களில், சிங்கிளாகவே வாழலாம் என்ற எண்ணமும் எனக்கு வந்தது. ஏனெனில் சினிமா தந்த புகழும், வசதிகளுமே இந்த உலகில் எனக்கு பெரியதாக இருந்தது. ஆனால், அந்த எல்லா வெற்றிகளுக்கும் மறுபுறம், தனிமையின் சுவடும் என்னுடன் இருந்தது. அந்த தலைமையை போக்கி கொள்ள ஒருநாள் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையே ஒரு புதிய பரிசோதனையாகவும் பரிட்சையாகவும் எனக்கு மாறியது. சினிமா வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள், ஏமாற்றங்கள், ஒதுக்கல்கள் எல்லாம் ஒரு விதம் இருந்தாலும், குடும்ப வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் மிகவும் தனித்துவமானவையாக இருந்தது. கணவன், மனைவி உறவில் இருக்கும் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், அன்புகள் வாழ்க்கையின் நிலைமாறுகள் என அனைத்தும் சேர்ந்து குடும்ப வாழ்க்கையில் எனக்கு மீண்டும் ஒரு பயணத்தை தொடங்க வைத்தது. அந்த பயணத்தில் நான் பல முறை அடியெடுத்து வைக்க பயந்தேன்.. தயங்கினேன்.
ஆனால், அந்த சவால்களை தாண்டி வந்ததால் தான் இன்று நான் இங்கே நிற்கிறேன். அந்தப் பயணம் எளிதல்ல. அதை வார்த்தைகளால் ஒருபொழுதும் விவரிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் எனது வாழ்க்கையின் உண்மையான வெற்றி என்னவென்றால், என் கணவரும், மூன்று மகன்களும் இன்று என் அருகில் இருப்பது தான். அவர்கள் என்னை அதிகமாக நேசிக்கிறார்கள். அந்த அன்பு, மரியாதை எனக்கு சினிமா அளிக்காத ஒரு பெரிய நம்பிக்கையை வழங்குகிறது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருமணம் என்பது சுமை அல்ல.. அது ஒரு மாற்றம். அந்த மாற்றத்தை ஏற்கும் மனத் துணிவும், அதை நடத்தும் பொறுப்பும் இருந்தால்தான் நம்மால் அதை அனுபவிக்க முடியும். வாழ்க்கையின் நிஜமான அர்த்தம், பாசத்திலும் பொறுப்பிலும் மட்டுமேதான் இருக்கிறது." என தனது குடும்ப வாழ்க்கையை குறித்து பேசினார்.
இதையும் படிங்க: மிகப்பெரிய வெற்றியை கொடுத்த "3BHK" படம்..! படக்குழுவின் அட்ராசிட்டி வீடியோ ரிலீஸ்..!
இன்று பல பெண்கள், தனித்துவமான வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் தொழில்முனைவோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவற்ற நிலைப்பாடுகளும், குழப்பங்களும் உள்ள பலருக்கும், நடிகை விசித்ராவின் இந்த உரை அருமையான பார்வையை வழங்குகிறது. வாழ்க்கையின் வெற்றியை புகழ், பணம், வசதிகள் என எண்ணாமல், உணர்வுப்பூர்வமான உறவுகளும், தாய்மை, மனைவித் தன்மையின் மகிழ்ச்சியுமாக காணும் அவருடைய பார்வை பலராலும் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், திரைப்படங்களில் கவர்ச்சி, சண்டை, நாடக கலவைகள் கொண்ட கதாபாத்திரங்களில் தோன்றிய விசித்ரா, இன்று ஒரு குடும்பத்தின் தலைவியாக அழகாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். சமூகத்தில் பெண்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் சந்திக்கும் மாற்றங்களை தெளிவாக வெளிப்படுத்தும் விதமாக, அவருடைய பேச்சு இருந்தது.

"திருமண வாழ்க்கை என்பது சவாலாக இருந்தாலும், அதில் காணப்படும் பாசமும் உறவுகளும் தான் வாழ்க்கையின் உண்மையான வெற்றி" என்கிற பார்வையில் பேசிய அவரது பேச்சு பல பெண்களுக்கு ஊக்கமும் தெளிவும் வழங்கக்கூடியதாக இருந்தது.
இதையும் படிங்க: சூதாட்ட விளம்பர விவகாரம்.. அமலாக்கத்துறை பிடியில் பிரபலங்கள்..! பீதியில் திரைத்துறையினர்..!