என்ன தான் இன்று சினிமாவில் அனைவரும் நான் தான் "லேடி சூப்பர் ஸ்டார்" என சண்டையிட்டு வந்தாலும், 90களின் காலக்கட்டத்தில் ஒருவரது அருகில் கூட எந்த நடிகையும் வரமுடியாத அளவுக்கு புகழ்பெற்ற உச்சபச்ச நட்சத்திரமாக வளம் வந்தவர் தான் நடிகை ரோஜா. அப்பொழுதே படங்களில் இவர் தோன்றினால் தியேட்டர்களில் விசில் சத்தம் பறக்கும். இவரது வசீகரமான கண் அசைவுக்கு மயங்காத இளசுகள் இருக்க முடியாது. முத்து போன்ற இவரது பொன் சிரிப்புக்கும் உதட்டின் அழகுக்கும் பெயர் பெற்றவர் தான் நடிகை ரோஜா.

பெரும்பாலும் இவரது படங்களில் சேலையில் குடும்ப பெண்ணாகவும் மாடர்ன் உடையில் கவர்ச்சி கன்னியாகவும் வளம் வந்தவர் தான் ரோஜா என்கின்ற ஶ்ரீலதா ரெட்டி. இப்படி பட்ட ரோஜா ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தையான நாகராஜா ரெட்டிக்கு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுக்க ஆசை. அவரால் சினிமாவில் ஜெயிக்க முடியாவிட்டாலும் தனது கனவை மகள் நிரைவேற்றுவார் என ரோஜாவை சினிமாவில் நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: ஊர்வசி விஷயத்தில் பல்பு வாங்கிய நெட்டிசன்கள்..! அறிக்கையில் சவுக்கடி கொடுத்த ரவுத்தேலா குழுவினர்..!

அந்த வகையில், 'பிரேம தபசு'என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ரோஜா. அந்த முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க, பல தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை ரோஜாவை நடிக்க வைக்க போட்டி போட்டனர். இப்படியே தெலுங்கில் படபடவென பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.
இதனை அடுத்து அவரை எப்படியாவது தமிழ் சினிமாவில் அழைத்து வர வேண்டும் என பல இயக்குனர்கள் போராட, 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் ஆக்ஷன் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, 'செம்பருத்தி'என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் தான் ஆந்திரா முகமான ஶ்ரீலதா ரெட்டியை தமிழ் சினிமாவுக்குக் அறிமுகப்படுத்தியதோடு, அவருக்கு 'ரோஜா'என புதுப்பெயர் சூட்டிய, பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் ஆர்.கே.செல்வமணி.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் தனது திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை பெரிதளவில் குறைத்து கொண்டார். படத்தில் நடிக்காவிட்டாலும் ஆந்திரா அரசியலில் அனைவரையும் தண்ணிகுடிக்க வைத்து வருகிறார் நடிகை ரோஜா. இந்த நிலையில், தனது கணவரை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார் ரோஜா. இந்த காணொளியானது தற்பொழுது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அதன்படி ரோஜா பேசுகையில், "நான் தான் எப்பவுமே அவரிடம் சண்டை போடுவேன். செல்வமணி சார் எப்பவுமே என்னிடம் சண்டை போட மாட்டார். கோபம் வந்ததுன்னா எதுவும் பேசாமல் சீரியஸா முகத்தை வைத்து கொண்டு ரூமுக்குள் சென்று கதவை மூடி கொள்வார். பின், கோபம் குறைந்ததும் வெளியே வருவார். பாவம் இது ஆண்களின் சாபம் என நினைக்க வேண்டாம். அவர் என்னை திட்டினால் நான் அழுவேன். அப்புறம் என்னை சமாதானப்படுத்த அவர் படாதபாடுபடனும்.

இதெல்லாம் எதுக்கு, அதற்கு ஒரு 10 நிமிடம் அமைதியா இருந்துக்கலாம் என இருப்பார். வாழ்க்கையில ஆண்கள் ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் பொண்டாட்டி கிட்ட தோத்துப் போங்க. பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டா வீட்டுல சண்டை போட்டுக்கிட்டே தான் இருக்கணும் நிம்மதி இருக்காது. அந்த சூழலில் உங்களால் வெளியே போய் ஜெயிக்கவும் முடியாது" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கவர்ச்சிக்கு திஷா பதானி.. பாசத்துக்கு குஷ்பூ பதானி..! குழந்தையை காப்பாற்றி ஃபேமஸ் ஆன நடிகையின் தங்கை..!