தென்னிந்திய திரையுலகில் அதிரடியாக வளர்ந்து வரும் நடிகைகளில் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் என பலர் இருந்தாலும் அவர்களுடன் இணைந்த படி வளர்ந்து வரும் ஹீரோயின் என்றால் அவர் தான் ஸ்ரீலீலா. இவர் தற்போதெல்லாம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் மட்டுமின்றி ஹிந்தியிலும் தனது காலடியைப் பதிக்கத் தயாராக இருக்கிறார். இளம் வயதிலேயே தன்னுடைய அட்டகாசமான நடிப்பால், பலரது கவனத்தையும் ஈர்த்து வளர்ந்துள்ள ஸ்ரீலீலா, தற்போது ரன்வீர் சிங் மற்றும் பாபி தியோல் நடிக்கும் பாலிவுட் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் படம் குறித்து தயாரிப்பு குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிக்கையும் தெரிவிக்காத நிலையில், இந்த செய்தி தற்போது பாலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆகவே, ரன்வீர் சிங் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாக, ஸ்ரீலீலா கமிட் ஆகி இருப்பது தமிழ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை, இந்தப் படத்தின் தலைப்பு, கதையின் பின்னணி, மற்றும் இயக்குநர் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், பாபி தியோல் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்துக்காக, ஒரு புதிய முகம் தேவைப்பட்டதாகவும், அதற்காக ஸ்ரீலீலா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என நிரூபிக்கப்பட்டால், இது ஸ்ரீலீலாவின் கெரியரில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையலாம்.

ஏனெனில், பாலிவுட்டில் அறிமுகமாகும் பல நடிகைகள் கூட ஒரு பெரிய பட வாய்ப்புக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், ஸ்ரீலீலா தனது படம் திரையில் வருவதற்கும் முன்னரே மிகப் பெரிய வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரது வளர்ச்சியின் பாதையை தெளிவாக காட்டுகிறது. இப்படியாக பாலிவுட்டில் ஸ்ரீலீலாவின் முதல் படம், நடிகர் கார்த்திக் ஆர்யன் உடன் என்பதால், இந்த படம் தற்போது இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்தால் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஒரு ரொமான்டிக் காமெடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்திருப்பது, ஸ்ரீலீலாவுக்கு ஹிந்தி திரையுலகில் பெரிய அட்டென்ஷனை கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: லீவு கொடுக்க மாட்டீங்கிறாங்க.. குடும்பத்தை பார்த்து 8 வருடம் ஆச்சு..! நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை..!
தொடர்ந்து, பாலிவுட்டில் இரண்டாவது வாய்ப்பாகவே, ரன்வீருடன் நடிக்கும் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதும், ஒரு வருடத்தில் இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் ஸ்கிரீன் ஷேர் செய்வது, ஸ்ரீலீலாவுக்கு அதிரடியாக சாத்தியமாகியுள்ளது. அதே சமயத்தில், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் ஸ்ரீலீலா மிகுந்த பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக பவன் கல்யாண் உடன், ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார். அடுத்ததாக ரவி தேஜா உடன் ‘மாஸ் ஜதாரா’ என்ற ஆக்ஷனும் மாஸும் கலந்த படத்திலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார். கடைசியாக, தமிழில், ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த மூன்று மொழிகளிலும் பிரமாண்டமான ஹீரோக்களுடனும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்கின்ற ஸ்ரீலீலா, தற்போது இந்திய சினிமாவின் பான் இந்திய ஸ்டாராக உருவெடுத்துள்ளார். கன்னட சினிமாவிலிருந்து அறிமுகமாகி, ‘பெல்லி சோபா’, ‘டில்லி’ போன்ற படங்களில் நடித்து, அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் ‘பைசா வசூல்’, ‘பாக்ஸாபிஸ்’ ஹிட் படங்கள் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிய ஸ்ரீலீலா, இப்போது அனைத்து மொழிகளிலும் பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற நடிகையாக வளர்ந்துள்ளார்.

இப்படி, இளம் வயதில் சினிமாவில் சாதனை படைத்த நடிகையாக, ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய திரையுலகைத் தாண்டி பாலிவுட்டிலும் பறக்கத் தயாராக இருக்கிறார். ஹிந்தியில் இன்னும் திரைப்படம் வெளியாகவே இல்லை என்ற நிலையில், அதில் முன்னணி கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததற்கே ஃபேமஸாகி உள்ளார். எனவே ஹிந்தி படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'நேஷனல் லெவலில் ரீச்சை' நோக்கி பயணிக்கும் ஸ்ரீலீலாவுக்கு, இந்த வளர்ச்சி ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்பது உறுதி.
இதையும் படிங்க: அப்செட்டானா இதெல்லாமா பண்ணுவாங்க..! இணையத்தில் பேசுபொருளாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு..!