புதுமுக நடிகையாக திரையுலகில் அறிமுகமாகி, வெகு குறுகிய காலத்திலேயே கோலிவுட் சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், அழகான புன்னகையாலும், திறமையான பரிமாணங்களாலும் ரசிகர்களின் மனதை வென்று 'நேஷனல் கிரஷ்' என்ற பட்டத்தை பெற்று உலகத்தின் புகழ் உச்சியில் வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகையாக இருப்பதுடன், சிறந்த ஹீரோயின்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதன்படி பேசுகையில், "எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு இப்போது 13 வயது ஆகிறது. என்னைவிட 16 வயது சிறியவள் அவள். எனக்கு அவள்மீது சொல்ல முடியாத அளவுக்கு அதிக பாசம் உள்ளது. அதனாலேயே அவளது குறும்புத்தனத்தை நான் மிகவும் அதிகமாக ரசிப்பேன். ஆனால் நாங்கள் ஒரு குடும்பமாக சந்தோஷமாக இருந்த நாள்கள் தான் எனக்கு இப்போதும் அதிகமாக நினைவில் இருக்கின்றன. ஆனால் கடந்த 8 வருடங்களாக, என் வேலைகள், படப்பிடிப்புகள், சினிமா பயணங்கள் என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதால், அவளை நேரில் கூட என்னால் பார்க்க முடியவில்லை. போனில் கூட பேச நேரம் இல்லாத அளவுக்கு என் சினிமா வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது.

அவளை ஒருமுறை பார்த்து சிரித்து, பேசிக்கொண்டு, கட்டிக்கொண்டு என் அருகில் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகம் இருந்தாலும், தொடர்ந்து வரும் சினிமா வேலைகளும் சிரமங்களும் என்னை அவளிடம் இருந்து பிரித்து அன்னியமாக்கி விட்டன. மேலும், நான் ஒவ்வொரு முறையும் இந்த மாதமாவது ஓய்வெடுத்து வீட்டுக்குச் செல்லலாம். என் தங்கையை நேரில் பார்க்கலாம். அவளுடன் சில நாள் சந்தோஷமாக கழிக்கலாம் என்றெல்லாம். ஆனால் ஒவ்வொரு முறையும், புதிய படப்பிடிப்பு, பிரமோஷன் டூர், ஏதாவது ஒரு வேலை முன்வந்து நிற்கிறது. நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று இப்பொழுது எல்லாம் அதிகமாக எண்ணுகிறேன். ஆனால் நேரம் என்பது என் கையில் இல்லாத ஒன்று போல இருக்கிறது " என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்செட்டானா இதெல்லாமா பண்ணுவாங்க..! இணையத்தில் பேசுபொருளாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு..!
அவரது இந்த வார்த்தைகள் ஒரு பெரிய நட்சத்திரத்தின் மனதுக்குள் உள்ள ஓர் மனக்குமுறலாகவே பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் கண்ணில் மகிழ்ச்சியாக இருப்பதை போன்று இருக்கும் ஒரு பிரபலமான நடிகையின் பிரபல வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் தனிமையும், குடும்பத்துக்கான ஏக்கமும் இதில் தெளிவாக தெரிகிறது. இந்த வருடம் மட்டும் பல முக்கியமான படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் ‘கேர்ள் பிரண்ட்’ என்ற படத்திலும், இந்தியில் ‘தாமா’ எனும் புதிய திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக திரை நட்சத்திரங்கள் பெரும்பாலும் தங்களது கெரியர் குறித்து மட்டும் அதிகம் பேசப்படும் சூழலில், ராஷ்மிகா தனது உண்மையான சகோதரிக்கு இவ்வளவு பாசம் காட்டும் அவரது செயல், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அதிக மதிப்பை கொடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ராஷ்மிகாவின் இந்த உருக்கமான பேச்சு பலரை உணர்ச்சி வசப்பட செய்துள்ளது. “நாம் தினமும் குடும்பத்துடன் இருப்பதையும், அவர்களுடன் பழகுவதை ஒரு சாதாரண விஷயமாக கருதுகிறோம். ஆனால் ஒருவருக்குத் தன் குடும்பத்துடன் சில நிமிடங்கள் கழிப்பதும் கனவாக இருக்கலாம் என்பது இவரது பேச்சில் புரிகிறது.

இவர் சொல்வதில் இருந்தே தெரிகிறது, பிரபலங்களும் மக்களின் பார்வைக்கு வெளியே சாதாரண மனிதர்களே என்பதை உணர்த்துகிறது. மனசாட்சியோடு வாழும் ராஷ்மிகா, தனது தங்கை மீது கொண்ட பாசத்தை வெளிக்காட்டாமல் இருப்பதுடன் அவரை நேரில் சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறார். பணம் சம்பாரிக்கவும் வாழவும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில், ஒரு சிறு பாசத்தை காண முடியாமல் இருக்கும் நிலை, மனதை உருக்கும் ஒருவிதமான உண்மை. ஆகவே ஒரு நாள் கண்டிப்பாக ஓய்வெடுத்து என் தங்கை முகத்தை காண்பேன் என ராஷ்மிகா எடுத்த சபதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் பிரபாஸ் முடிக்கு என்னதான் ஆச்சு..! இணையத்தில் வைரலான புகைப்படத்தால் சர்ச்சை..!