நடிகர் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தை யாராலும் மறக்க முடியாது அதில் என்னதான் சிட்டி ரோபோ முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் அனைவரது கண்களில் தேடப்பட்டவராகவும் ரசிக்கப்பட்டவராகவும் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவரது நடிப்புக்கு ஒரு கூட்டம் என்றால் இவரது அழகுக்கும் இவரது இடைக்கும் இவரது கண்ணுக்கும் ஒருகூட்ட ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர். இப்படி, இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என இவரை அனைவரும் கேள்வி கேட்கும் அளவிற்கு தனது அழகாலும் திறமையாலும் பல ரசிகர்களை மயக்கி வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். இப்படி, உலக அழகி பட்டம் வென்று இந்தியாவின் பெருமையாக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராய். 1994-ம் ஆண்டு "Miss World" பட்டம் பெற்ற பின்னர், பாலிவுட் திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்தார். தனது அழகு, நடிப்பு திறமை, மற்றும் அருமையான வர்த்தக செல்வாக்கு காரணமாக, அவர் கொஞ்சகாலத்திலேயே பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவர் என்ன தான் பாலிவுட்டில் கலக்கி வந்தாலும், தமிழில் இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மணிரத்தினம். அவரது படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர் தான் கண்ணழகி ஐஸ்வர்யா ராய். பின்னர் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற முக்கியமான படங்களில் நடித்து பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஐஸ்வர்யா, தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது நடிப்பை முற்றிலும் குறைத்து தனது குடும்ப வாழ்க்கையின் மீது அதிக ஆர்வமுடையவராக காணப்படுவதால் தற்பொழுது எந்த படங்களிலும் நடிப்பதில்லை.

இப்படி இருக்க, கடந்த 2007-ம் ஆண்டு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் இந்தியாவின் சினிமா உலகில் மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டது. இவர்கள் இருவருக்கும் 13 வயதுடைய 'ஆராத்யா' என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அபிஷேக் பச்சன், தனது மகள் ஆராத்யாவைப் பற்றியும், தனது மனைவி ஐஸ்வர்யா ராயின் பொறுப்பை பற்றியும் உருக்கமாகப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், " என் மகள் ஆராத்யா எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. இன்றைய பிள்ளைகள் போலவே செல்போனில் மூழ்கி இருப்பதும் இல்லை. அவருக்கு அந்த ஆர்வமே துளிகூட கிடையாது. இது அனைத்திற்க்கும் காரணம் என் மனைவி ஐஸ்வர்யா ராய் தான். ஏனெனில், இன்று என் மகள் ஆராத்யா பண்போடும் ஒழுக்கத்தோடும் இருக்கின்றதற்கு முழு காரணம் ஐஸ்வர்யா தான் காரணம். அவர் ஒழுக்கமான முறையில் குழந்தையை வளர்க்கிறார். என் மனைவி ஆராத்யாவை வளர்ப்பதில் மிகவும் கட்டுப்பாடும், அன்பும் கலந்த அணுகுமுறையை பயன்படுத்துகிறார். அவரால் தான், என் மகள் எங்கள் குடும்பத்தின் பெருமையாக எப்பொழுதும் இருக்கிறாள். நான் பெருமையுடன் சொல்கிறேன், ஆராத்யாவை சிறப்பாக வளர்த்ததற்கான பாராட்டு முழுவதும் எனது மனைவியையே சேரும்" என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீதாதேவி-யின் பெயருக்காக நடந்த போராட்டம்..வெற்றிகண்ட சென்சார் போர்டு..! 'ஜானகி vs. ஸ்டேட் ஆஃப் கேரளா' படத்தின் பெயர் மாற்றம்..!
நடிகர் அபிஷேக் பச்சனின் இந்த வார்த்தைகள், கணவனாக மனைவியின் பங்கு குறித்து அவர் மரியாதையையும், கௌரவத்தையும் வெளிபடுத்தும் வண்ணம் இருக்கிறது. தற்போது, சமூக ஊடகங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதும், அதன் தாக்கங்கள் பற்றியும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் இந்த சூழலில், நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகளுக்கு அளித்துள்ள நேர்த்தியான வளர்ப்பு நெறிமுறைகள் குறித்ததான அபிஷேக் பச்சனின் கருத்துகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் அவர் பேசியது திரையுலகத்தைத் தாண்டி, பெற்றோர் சமூகத்திலும் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. திரை நட்சத்திரங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் குறித்து பொதுமக்களுக்கு பெரும் ஆவலும், ஆச்சரியமும் இருக்கும். ஆனால், ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்கு சமூக ஊடகங்கள், மொபைல் போன் உள்ளிட்டவற்றின் மீது கட்டுப்பாடு விதித்து, மிகவும் நேர்த்தியாக வளர்த்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரைப்பட உலகத்தில் பிரபலங்களாக இருந்தாலும், பெற்றோராக அவர்கள் மேற்கொள்ளும் பொறுப்பும், முறைகளும் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கக்கூடியவை என்பதற்கு, அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் வாழ்க்கை ஓர் அருமையான எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இதையும் படிங்க: நடிகை ஸ்ரீதேவிக்கு எனக்கும் இருத்த உறவு காதலை விட..! நடிகர் கமல்ஹாசன் ஓபன் டாக்..!