தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் அஜித் குமார், தற்போது திரைப்படங்களை தவிர்த்து தனது கனவான மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். "தல" என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் இவர், கடந்த சில வருடங்களாகவே வாடிக்கையாக ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது, அவர் உரிமையாளராகவும், டிரைவராகவும் உள்ள "அஜித் குமார் ரேஸிங்" குழு, பல முக்கியமான சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்து வருகிறது.
இதற்கு முன்னர் “அசல்”, “வேதாளம்”, “விஸ்வாசம், குட் பேட் அக்லி” போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர், தற்போது திரைத்துறையில் இருந்து ஓரமாக இருந்து தனது ரேஸிங் கனவுகளை சாத்தியமாக்கி வருகிறார். ரேஸிங் என்பது பலருக்கும் "வேகத்தை விரும்பும் சிலரின் ஆடம்பர விருப்பம்" போலத் தோன்றினாலும், அதன் பின்னுள்ள தியாகம், துடிப்பு மற்றும் உயிரை பணயமாக வைத்து நடைபெறும் முயற்சிகளை வெளிக்கொணரும் நோக்கத்தில் தான் அஜித் தற்போது செயல்படுகிறார். அவர் தனது டீம் உடன் பல முக்கியமான ரேஸ்களில் பங்கேற்று, சில இடங்களில் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். பரிசு வழங்கும் மேடையில், அவர் இந்திய தேசியக் கொடியுடன் மேடையில் வருவது, ரசிகர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது வெறும் விளம்பர செயலாக அல்ல, அவர் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது வைத்துள்ள உணர்வை காட்டும் ஒரு அத்தாட்சியாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க ஒரு சமீபத்திய உரையாடலில், அஜித் அளித்த உரை இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர், "நான் என்னோட பாராட்டுகளுக்காக இங்க வரல. தயவுசெய்து என்னை promote பண்ணாதீங்க. இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துங்க. இது எவ்வளவு கடினமான ஒரு துறை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதுல fun எதுவும் இல்ல. இது உயிரைப் பணயம் வைக்கும் ஒரு துறையா இருக்கு. நாளைய நாளில், இந்தியாவிலிருந்தே F1 சாம்பியன் ஒருவர் பிறப்பார். அதை நீங்கள் இப்போதே தொடங்குங்கள்" என்றார். அவரது இத்தகைய பேச்சு திரையுலக நடிகர்களிடம் இருந்து சாத்தியமில்லாதது என்று எண்ணும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது, அஜித் நம் நாட்டின் மோட்டார் ஸ்போர்ட்ஸ்துறையை வளர்க்க விரும்பும் உண்மை முயற்சியைக் காட்டுகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பது வெறும் வேகமான வாகனங்கள் மட்டுமல்ல. அது காலட்சேபமாகவோ, பொழுதுபோக்காகவோ அல்ல. இதில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், கடுமையான பயிற்சி, சகிப்புத்தன்மை, நேரம் பற்றிய துல்லியம், உயிரோடு விளையாடும் தைரியம் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் செயல்பட வேண்டியதுதான். அது மட்டுமல்ல, இந்த துறையில் சாதிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள், தொழில்நுட்ப ஆதரவு, டெடிகேட்டட் அணிகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் இந்தியாவில் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளது. அதனால் தான், அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது, ஊடகங்களையும், பொதுமக்களையும், அதிகாரிகளையும் நோக்கி இந்த துறையைப் ப்ரொமோட் செய்ய வேண்டுமென்ற தனது வேண்டுகோளை எழுப்புகிறார். அஜித், மிகவும் தனிமையில் வாழ விரும்பும் ஒருவராக அனைவருக்கும் தெரிந்த விஷயம். சினிமா வெற்றிகளை கொண்டு கொண்டாடாமல், விழாக்கள், பேட்டிகள் என பொது நிகழ்வுகளில் தவிர்ப்பவர். இத்தகையவர் தான் தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் வெற்றி பெற்றபோதும், பாராட்டு பெறும்போதும், "நான் இல்லை, இந்தியா இருக்கட்டும் மேடையில்" என சொல்லி, நாட்டின் கௌரவத்தை முன்னிலைப்படுத்துகிறார்.
இதையும் படிங்க: நடிகர் அஜித் குமார் சம்பாதிப்பதே கார் வாங்கத்தானே..! இப்ப எவ்வளவு பட்ஜெட்ல வாங்கி இருக்குக்காரு தெரியுமா..?
அதிலும் குறிப்பாக, பரிசு மேடையில் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்லும் அவரது ஒவ்வொரு செயலும், “வெற்றி எனது தனிப்பட்டதல்ல, இது என் நாட்டின் வெற்றி” என்பதைக் காட்டும். இது வெறும் சினிமா ஹீரோவின் பிம்பம் அல்ல, ஒரு உண்மையான நாட்டு மகனின் உணர்வுகளைக் காட்டும் செயல். அஜித் குமார் போன்ற பிரபலங்கள் இந்த துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, இளம் தலைமுறைக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும். இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை வளர்த்தெடுக்க, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு முயற்சிகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே திரையுலகப் பிரமுகரான அஜித் குமார், தனது ரியலான ஆர்வத்தையும், நாட்டின் மேம்பாட்டிற்கான பொறுப்புணர்வையும் காட்டும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸில் முழுமையாக ஈடுபடுகிறார்.

அவரது சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, வாழ்க்கையின் ஒரு பக்கம். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை உலகளவில் முன்னெடுக்க, இவரது பார்வை மற்றும் முயற்சி, மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பது உறுதி. அவருடைய வீடியோவை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்றால், கண்டிப்பாக பாருங்கள்.. அது ஒரு நடிகரின் பேச்சு இல்லை, அது ஒரு இந்தியாவின் கனவுகாணும் மகனின் உணர்ச்சி உரையாடல்.
இதையும் படிங்க: என்ன இப்படி கோபப்படுறாங்க..! தன்மீதான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகாநதி சீரியல் நடிகை லட்சுமி..!