18 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஒல்லியாகவே இருக்கும் அழகிய நடிகை என்றால் அவர் நடிகை வேதிகா தான். இவரது நடிப்பில் வந்த படங்களை விட இவர் கூறிய ஒரு டையலாக்கும் ஒரு பாடலுக்கு ஆடிய நடனமும் இன்று வரை மிகவும் ஃபேமஸ். அவை என்னவெனில் "ரொம்ப மோசமான உருவம்டா சாமி" என கூறி லாரன்ஸிடம் அடிவாங்கியதும், "குட்டி பிசாசே" என்ற பாடலில் மிகவும் அழகாக சிம்புவுக்கு இணையாக ஆடி அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவையுமே.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் வேதிகா தமிழ் திரையுலகில் 2006ம் ஆண்டு வெளியான "மதராசி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இன்ஸ்பிரேடு மூவிஸ் & ஸ்பைஸ் டீம் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிபில் அர்ஜுன் இயக்கி நடித்த இப்படத்தில், ஜெகபதி பாபு, காஜலா ஆகியோருடன் வேதிகா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் "சிவகாசி" என மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அப்பா என்பது வார்த்தை அல்ல நம்பிக்கை..! AK பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக, அதன் பின் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி, தருண் கோபி இயக்கத்தில் காளை, கலாபிரபு இயக்கத்தில் சக்கரகட்டி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் மலை மலை, இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி, வசந்தபாலன் இயக்கத்தில் காவிய தலைவன், மீண்டும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3, எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பேட்ட ராப், விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் விநோதன் போன்ற படங்களில் இயக்குனர்கள் இவரை நடிக்க வைத்தனர்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது பிரபாதீஷ்சம்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "கஜானா" என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. அதுமட்டுமல்லாமல், கார்த்திக் ராஜா வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ஜங்கிள்" என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 4ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படி இந்த வருடமும் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார் வேதிகா.

இந்த நிலையில், சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த வேதிகா, தனது மனதில் இருக்கும் இரண்டு காதல்கள் குறித்து மனம் விட்டு பேசியுள்ளார். அதில் "எனது வாழ்க்கையில் நான் எதிர்பார்க்கும் இரண்டு காதல்கள் உண்டு. அதில் முதல் காதல் என் முத்தான காதல் என் அம்மாவிடம் தான். இரண்டாவது காதல் யார் மீது என்றால் அது நடனம் மீது தான். ஏனெனில் நான் நடனத்தின் மீது பைத்தியம் பிடித்தவளாய் உள்ளேன். எந்த அளவிற்கு என்றால் எனக்கு சிறிது ஓய்வு கிடைத்தாலே போதும் உடனே நடனம் ஆட தொடங்கிவிடுவேன். இந்த இரண்டு காதல்களும் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்கும்" என கூறினார்.

அப்படி என்றால் உங்களுக்கான வாழ்க்கை துணியை தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு ஆசையில்லையா என கேட்டதற்கு, அதற்கு நேரம் வரட்டும் பிறகு பார்க்கலாம் என கூறிச்சென்றார்.
இதையும் படிங்க: படம் என்னுது நடிப்பு உன்னுது..! ஆட்டத்தை ஆரம்பித்த நடிகர் விஜயின் மகன்..!