நடிகர் அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு வெளியான "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், "அமராவதி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்த அஜித் அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது.

இதனை அடுத்து, அஜித் குமாரின் நடிப்பில் வெளியான "ஆசை" திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அஜித்குமாரின் ப்ளாக் பஸ்டர் படமாக பார்த்தால் 2002-ம் ஆண்டு வெளியான "தீணா" திரைப்படம் தான். இதற்கு பின்பு தான் அஜித்துக்கு "தல" என்ற பெயரை ரசிகர்கள் அன்புடன் வைக்க ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: இதுதாண்டா தல..! நான் ஒரு மிடில் கிளாஸ் தான்..! அதிரடி பேட்டி..!

இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இப்படி பல படங்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தாலும் அவர் யாருக்கும் தெரியாமல் செய்யும் உதவிகளாலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். உதாரணமாக 2014-ம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்யும் 12 பேருக்கு சொந்தமாக வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும், 2018-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ட்ரோன் விமானம் ஒன்றினை உருவாக்கி அசத்தினார். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் குழு ஒன்றை அமைத்து உதவி செய்தார்.

இப்படி இருக்க, நடிகர் அஜித், ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த இவர் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் தனியார் சேனலுக்கு நடிகர் அஜித் கொடுத்த பேட்டியில் மறைந்த தனது தந்தையை குறித்து மனம் விட்டு பேசியுள்ளார்.

அதில், "விளையாட்டு எப்படி எனக்கு மிகவும் பிடிக்குமோ அப்படித்தான் எனது அப்பாவுக்கும். மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றி அவர் என்னிடம் கூறும்பொழுதெல்லாம் அது மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என்றே சொல்வார். அவர் அன்று சொன்னது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. உன் ஆசைக்கு நான் என்றும் தடையாக நிற்கமாட்டேன். ஏனெனில் உன் விளையாட்டுக்கு நிதி உதவி செய்ய என்னால் முடியாது.

அந்த அளவிற்கு பொருளாதாரம் நம்மிடம் இல்லை. ஆனால், நான் உன்னை ஒருநாளும் தடுக்க மாட்டேன் நீ மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேல எவ்வளவு ஆர்வம் காட்டுகிறாய் என எனக்கு தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடிக்க வேண்டும் கண்டிப்பாக அது உன் லட்சியத்திற்கு உதவி செய்யும் என்றார்" என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நாளைக்கு பர்த்டே.. இன்று மருத்துவமனையில் அட்மிட்... ஷாக்கில் அஜித் ரசிகர்கள்...!