கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுள நகரத்தில் பிறந்த நடிகை அமலா பால் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர். அமலா பால் கல்லூரியில் படிக்கும் பொழுதே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டதால் படவாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார். பின் கேரளாவில் உள்ள மாடலிங் துறையில் பணியாற்றிய அமலா பாலுக்கு 2009-ம் ஆண்டு "நீலதம்ரா" என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக பின் தமிழில் நடிக்க களமிறங்கினார்.

தமிழில் ஆரம்பத்தில் வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கான சில ரசிகர்களை உருவாக்கினார். இதனை அடுத்து "மைனா" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய தமிழ் திரையுலகில் தனக்கான ரசிகர்களை பெற்றார். மேலும் நடிகர் விஜயுடன் இவர் நடித்த தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், ஆர்யாவின் சேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அபார திறமையை காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: திருவிழாவில் மயங்கி விழ சரக்கு அடித்ததுதான் காரணமா..! நடிகர் விஷால் சொன்ன விளக்கம்..!

இப்படிப்பட்ட அமலா பால், கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் உள்ளார். இப்படி இருக்க, மைனா, சிந்து சமவெளி, வீரசேகரன், தெய்வத்திருமகள், விகடகவி, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி, கடவர், விக்டிம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த சூழலில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமலா பால் தனது கணவரை குறித்து பேசியுள்ளார். அதில் "முதன் முதலில் நானும் என் கணவரும் கோவாவில் தான் சந்தித்தோம். உண்மையில் அவர் ஒரு குஜராத்தி ஆனாலும் கோவாவில் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்திய படங்கள் பார்க்கும் பழக்கமாக சுத்தமாக இல்லை. அதனால் நான் ஒரு நடிகை என்பதே அவருக்கு தெரியாது. நானும் அதை பற்றி அவரிடம் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவருக்கு நான் ஒரு நடிகை என்பது தெரிய வந்தது. நான் கர்ப்பகாலத்தில் இருக்கும்போது தான் என்னுடைய படங்களையே அவர் பார்த்தார். அவருக்கு தொலைக்காட்சியில் விருது நிகழ்ச்சிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்ப்பெட்டில் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாக பார்த்தார். அது எனக்கு புது அனுபவமாக இருந்தது" என அமலா பால் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சந்தானத்தை மன்னிச்சிடுங்க பவன் கல்யாண்.. ப்ளீஸ்..! நண்பனுக்காக பேசிய கூல் சுரேஷ்..!