சந்திர கிரகணம் செப்டம்பர் 07 ஆம் தேதி இரவு 9:50 மணி முதல் செப்டம்பர் 08 ஆம் தேதி அதிகாலை 1:31 மணி வரை கிரகணம் நீடிக்கும்.எனவே திருப்பதி ஏழுமலையான் கோயில்  செப்டம்பர் 07 ஆம் தேதி பிற்பகல் 3:30 மணி முதல் செப்டம்பர் 08 ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை மூடப்படும்.  சந்திர கிரகணத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு,  செப்டம்பர் 07 ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு  கோயில் மூடப்படும்.
சுத்தம் செய்து கிரகண தோஷ நிவாரண பூஜைக்கு பிறகு செப்டம்பர் 08 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோயில் கதவுகள் மீண்டும் திறக்கப்படும். பக்தர்களுக்கான தரிசனம் செப்டம்பர் 08 ஆம் தேதி காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் தொடங்கும். சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 07 ஆம் தேதி ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை போன்ற அர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் அன்னபிரசாத விநியோகம், தரிகொண்ட  அன்னபிரசாத வளாகம், வைகுண்டம் காம்பளக்ஸ் அறைகள்  மற்றும் அனைத்து இடங்களிலும் செப்டம்பர் 07 ஆம் தேதி பிற்பகல் 3 மணியும் அன்னப்பிரசாதம் வழங்குவது  நிறுத்தப்படும். இருப்பினும் அன்னபிரசாதப் பிரிவு சார்பில் ராமபாகீஜா யாத்திரிகள் சமுயாய கூடம், சி.ஆர்.ஓ. அலுவலகம், சேவா சதன்,  ஏ.என்.சி. பகுதிகளில் பக்தர்களுக்கு 30,000 அன்னபிரசாதப் பாக்கெட்களில்  விநியோகிக்கப்படும்.
பக்தர்களுக்கு அன்னபிரசாத மீண்டும் வழக்கம் போல்  செப்டம்பர் 08 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் மீண்டும் தொடங்கும். எனவே, பக்தர்கள்  சிரமங்களை தவிர்க்க திருமலைக்கு தங்கள் யாத்திரையை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டம்.. தமிழக அரசு வலியுறுத்தியது என்ன..??