தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொரு சீசனிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது.

வழக்கமான தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களை தாண்டி, போட்டியாளர்களின் தனிப்பட்ட குணம், அவர்களுக்குள் உருவாகும் நட்பு, கருத்து வேறுபாடு, சண்டை, காதல், போட்டி என பல்வேறு விஷயங்களை ஒரே இடத்தில் காண முடிவதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: கருணையோடு இருப்பது நடிப்பல்ல..!! இதுதான் என்னுடைய உண்மையான முகம் – ராஷ்மிகா மந்தனா அதிரடி பேச்சு..!

அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 10-வது சீசனும் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை சந்தித்து வரும் நிலையில், போட்டி தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

ஆரம்பத்தில் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்களை விட, நிகழ்ச்சி செல்லச் செல்ல புதிதாக வருபவர்களின் வருகை ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும்.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற வைல்டு கார்டு என்ட்ரி இந்த சீசனின் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ட்ரெயின், பிசாசு 2 தள்ளிப்போக காரணமே அந்த இரண்டு யானைகள் தான்..!! இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பேச்சு..!