என்ன தான் செய்வார் சாந்தானம் பாவம் உதயநிதிக்காக பிரச்சாரம் செய்வேன் என சொன்ன ஒரு வார்த்தைக்காக அவரை வளைத்து கட்டி வருகின்றனர் பாஜகவினர். சமீபத்திய நேர்காணலில் பேசிய நடிகர் சந்தானம், எனக்கு உதயநிதி ஸ்டாலினும் நண்பர்தான் அவர் கூப்பிட்டால், ஒரு சில காரியங்கள் எனக்கு செட் ஆனால் கண்டிப்பாக அவருக்காக இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் உதாரணத்திற்கு தற்பொழுது சிம்புவுடன் நடிக்கும் எனக்கு அவர் எந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறாரோ எனது மரியாதை குறையாத வண்ணம் வைத்துள்ளாரோ அதே போல் உதயநிதியும் செய்தால் அவருக்கு துணையாக நிற்பதில் தவறில்லை என தெரிவித்தார். அவர் தெரிவித்த மறுகனமே அவருடைய படத்தின் மீது பாஜகவினர் வழக்கு தொடர்ந்தனர்.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதியான நாளைய மறுநாள் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. பாஜக டார்கெட்டில் சந்தானம்.. சிக்கியது டிடி நெஸ்ட் லெவல்..!

இந்த சூழலில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம்பெற்றுள்ளது. எனவே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என நடிகர் சந்தானம் மீதும் மே16ம் தேதி வெளியாகவுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் மீதும் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.

அவர்களை தொடர்ந்து, திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீதும் திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் ஜனசேனா கட்சியினர்.

இதனை அடுத்து, 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பெருமாள் பாடலை நீக்கக் கோரி, நடிகர் சந்தானம் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் பாடலை எழுதியவர் அதனை பாடியவர் இசையமைத்தவர் என அனைவரும் வந்து பாடலுக்கும் உரிமை கோர வேண்டியது தானே என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!