தமிழ் சினிமாவில் இசை மற்றும் நடிப்பின் மூலமாக பல கோடி ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் தான் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் தனது அடுத்த படமான 'பிளாக்மெயில்' மூலமாக மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை பெற்றுள்ளார். மிஸ்டிரி மற்றும் த்ரில்லர் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படம், சிறந்த தொழில்நுட்பக் காட்சிகளுடன், மாறுபட்ட கதை களத்தில் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை மு.மாறன் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய சஸ்பென்ஸ் படங்களை இயக்கியவர் என்ற வகையில், 'பிளாக்மெயில்' திரைப்படத்திலும் சிக்கலான த்ரில்லர் திரைக்கதை அம்சங்களை நன்கு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
குறிப்பாக பிளாக்மெயில் படத்தில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். இவர் முன்னதாக சில இணைய தொடர்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளவர். தற்போது ஒரு பெரிய திரைபட வாய்ப்பாக ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளதால், அவரின் நடிப்பும் இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் மேலும், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக் மற்றும் ஹரி பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசையை சாம் சி.எஸ். வழங்கியுள்ளார். ‘விக்ரம் வேதா’, ‘கைதி’, ‘இரவை’ போன்ற படங்களில் இசை அமைத்து ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், பிளாக்மெயில் திரைப்படத்திலும் மாறுபட்ட இசை பாணியுடன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி இருக்க ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீடு தற்பொழுது தாமதமாகியுள்ளது. அதன்படி படகுழுவினர் வெளியிடப்பட்ட தகவலின்படி, புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்காலிகமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதாலும், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாலும், படக்குழுவும் கூடுதல் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ப்ரமோஷன் வேலைகளில் அதிகளவு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல், நடிப்பிலும் தொடர்ச்சியாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ், கடந்த மாதங்களில் கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை..கண்ணீர் விட்ட ரெசார்ட் மேலாளர்..! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை கல்பிகா கனேஷ்..!
இதனை தொடர்ந்து தற்பொழுது பிளாக்மெயில் படம் மூலம் மீண்டும் தனது நடிப்புத் திறனை நிரூபிக்க இருக்கிறார். பிளாக்மெயில் படத்தின் தொழில்நுட்ப தரம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கதையமைப்பு என பல்வேறு அம்சங்களில் முழுமையான திரைத்தொடர் அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகியுள்ளது. இதற்காக பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், இயக்குநர் மிக கவனமாக கதையை வடிவமைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இணையத்தில் வெளியான டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பின்னணிப் பாடல்கள் அனைத்துமே இப்படத்தின் மீது ஆர்வத்தை கூட்டியுள்ளன. குறிப்பாக சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு, பிளாக்மெயில் திரைப்படம் புதிய அனுபவத்தை தரும் என கூறப்படுகிறது. மொத்தத்தில் சஸ்பென்ஸ், த்ரில்லர், இசை, நடிப்பு என இவை அனைத்தையும் ஒரே கட்டத்தில் கொண்டு வர முயன்றுள்ள பிளாக்மெயில் திரைப்படம், ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்குப் புதிய பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த படத்தின் வெளியீடு தாமதமானாலும், இது ஒரு ப்ரமோஷன் யுக்தியாக இருக்கலாம் என்பதும் பேசப்படுகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா விமர்சகர்களும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நடிகர் நாகார்ஜுனா..! மன்னிப்பு கேட்டதால் தான்.. இஷா கோபிகர் ஓபன் டாக்..!