தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான கல்பிகா கனேஷ், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பான சர்ச்சையில் வசமாக சிக்கி உள்ளார். இவர் ஐதராபாத்தைச் சேர்ந்த கல்பிகா கனேஷ், 2009-ம் ஆண்டு வெளியான ‘பிரயாணம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் ‘ஆரஞ்சு’, ‘ஜூலாய்’, ‘சீதம்மா வகிட்லோ ஸ்ரீரிமல்லே சீட்டு’, ‘படி படி லெச்சே மனசு’, ‘ஹிட்: தி பர்ஸ்ட் கேஸ்’, ‘யசோதா’ உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
பின் 2023-ம் ஆண்டு வெளியான ‘அதர்வா’ படத்தில் நடித்ததுடன், ‘எக்கடிகி ஈ பருகு’ மற்றும் ‘லூசர்’ என்ற ஜீ5 வெப் தொடர்களிலும் நடித்த கல்பிகா தனது திறமையை வெளிப்படுத்தி பல ரசிகர்களை தன்வசமாக ஈர்த்தார். இப்படி கல்பிகா படத்தில் நடித்ததை விட, பரபரப்பான சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் தான் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறார். சமீபத்தில், தனது நண்பருடைய பிறந்தநாளை கொண்டாடிய கல்பிகா, ஐதராபாத்தில் உள்ள ஒரு பப்பிற்கு சென்றுள்ளார். அங்கு பப்பின் ஊழியர்களுடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து பப் ஊழியர்கள் போலீசில் புகார் அளித்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பலரது வசைபாடுதலுக்கு ஆளாகி இருக்கிறார் கல்பிகா கனேஷ். இதனைத் தொடர்ந்து, கல்பிகா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதன்படி, ஐதராபாத் அருகே உள்ள மொய்னாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபல ரெசார்ட்டுக்கு தனியாக சென்றிருக்கிறார் கல்பிகா. அங்கு ரிசெப்ஷன் மேலாளருடன் பேசும் போது, சில காரணங்களால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமான கல்பிகா, ரெசார்ட் மேலாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, மெனு கார்டை வீசி, ரெசார்ட் அறை சாவியை மேலாளரின் முகத்தில் அடித்த பரபரப்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நடிகர் நாகார்ஜுனா..! மன்னிப்பு கேட்டதால் தான்.. இஷா கோபிகர் ஓபன் டாக்..!
இதன் பின்னர் கல்பிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட விளக்க பதிவில், "ரெசார்ட்டினுல் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. இதனால் நான் ஒரு கேப் புக் செய்ய சொல்லி கேட்டேன். ஆனால் மேலாளர் உதவாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் என் பேச்சை கவனிக்காமல் வாக்குவாதத்தில் இறங்கினார். அதனால் கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்" என்று தெரிவித்தார். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு புகாரும் காவல் துறையில் பதிவாகவில்லை என்றும், கல்பிகா தரப்பில் இருந்து புகார் வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்பிகா கனேஷ் என்ற பெயர் தற்போது சர்ச்சைகளால் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. தற்போது நடிப்பைத் தவிர பல வாக்குவாத சம்பவங்களால் கல்பிகா மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளார்.

கல்பிகா கனேஷின் இந்த நடத்தை எதிர்காலத்தில் அவருடைய கெரியருக்கு எந்த வகையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பது காலப்போக்கில் தான் தெரியவரும்.
இதையும் படிங்க: பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்..! பெண் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்..!