சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் "கூலி" . இப்படத்தின் தலைப்பை இதற்கு முன்பாக எங்கையோ கேட்டதை போல் இருந்திருக்கும். ஆம், இது ஒரு பிரமாண்ட படத்தின் தலைப்பு தான் கூலி, இப்படத் தலைப்புக்கு சொந்தமான படம், கடந்த 1995ம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படமாகும்.

இப்படத்தின் தலைப்பை வைத்து தான் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார். அந்த வகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள "கூலி" படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து, தற்பொழுது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் 'கூலி' பட பாடல்..! அனிரூத் இசையில் மிரட்டும் சாங் ரிலீஸ்..!

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.

மேலும்,கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது.

இப்படி பல எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிக்கிட்டு என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் மில்லியன் வீவ்ஸ்களையும் பெற்றுள்ளது. இப்படி இருக்க, படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சிக்கிடு பாடலை பற்றி அனிருத் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் "சிக்கிடு பாடலின் வீடியோவை லோகேஷ் கனகராஜ் மிக அருமையாக எடுத்து இருந்தார்.

முதன்முதலில் அந்த வீடியோவை பார்த்த போது நாங்கள் மிரண்டுவிட்டோம். பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சாரை நாம் இந்த கெட்டப்பில் பார்க்கிறோம். ரஜினி சார் ஷூட்டிற்கு முன்பு எந்த பாடலையும் கேட்க மாட்டார். இப்பாடலின் முதல் நாள் ஷூட்டிங் முடிந்த பின்பு இப்பாடல் அவருக்கு பிடித்ததாக" அவர் கூறினார்.
இதையும் படிங்க: Time to #GetChikitufied.. வெளியானது 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!