இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் தான் ‘கூலி’. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்தப் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த விமர்சனங்களுடனும், ஹைப்புடனும் உருவாகி வருகிறது. ஆக்ஷன், திரில்லர், எமோஷன் என அனைத்தையும் கலந்து உருவாக்கப்படும் இந்த படத்தின் கதையின் பின்னணி தங்கக் கடத்தல் மற்றும் சர்வதேச மாபியாவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியாகிய ஒரு பரபரப்பான தகவலின்படி, ‘கூலி’ படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு மிக முக்கியமான குரல் வளம் பயன்படுத்தப்பட உள்ளதாம். அதுவும் யாருடைய குரல் தெரியுமா? அது வேற யாருடைய குரலும் அல்ல அது உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களுடை குரல் தானாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் ஹாசனை சந்தித்து, இந்த குரல் ஓவரைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த வாரமே கமல் ஹாசன் 'கூலி' படத்திற்கு குரல் கொடுப்பார் என படகுழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முக்கியமான காரணம், கமலின் குரல் ஒரு திகிலூட்டும் தொடக்கத்திற்கும், கடுமையான கதையின் பின்னணிக்குமான உருமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதை இயக்குனர் நன்கு புரிந்திருக்கிறார். மேலும், கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் ஒரே படத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும், ஒருவரின் குரல் மற்றொருவரின் கதையில் பங்களிப்பது ரசிகர்களுக்கு எப்போதும் ஒருவித ‘Mass Appeal’-யை வழங்கும்.

அதன்படி, இந்த ‘கூலி’ படத்தின் கதைக்களம், லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) என்ற தொடர்கதையின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏற்கனவே ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்கள் ஒரே உலகத்தில் நடைபெறுவதாக இயக்குனர் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து, ‘கூலி’யும் அந்தக் தொடரில் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ‘கூலி’யில் ரஜினிகாந்துடன் இணைந்து, தென்னிந்தியாவின் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அன்னைக்கு காசு இல்ல.. பிளாட்பாரம் தான் படுக்கை..! ரஜினி நட்பு குறித்து பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபு..!
அவர்களில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், மற்றும் ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் குரல் ஓவர் மட்டுமல்ல. இது, இருவரும் ஒரே சினிமா உலகத்தில் ஒரே நேரத்தில் பணியாற்றுவதை உறுதி செய்யும் ஒரு கலைநயமிக்க அரசியல் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் 1980களில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்த '16 வயதினிலே', 'நினைத்தாலே இன்னிக்கும்', 'அவளின் ஆசை', 'தர்மயுத்தம்' போன்ற பல படங்களை நினைவுகூரச் செய்யும். இப்படம் ரிலீஸானதும், ரஜினியின் நடிப்பும், லோகேஷின் இயக்கமும், அனிருத் இசையும், கமல் குரலும் சேர்ந்து 2025ஆம் ஆண்டின் மாஸ் ஹிட் படமாக இப்படம் மாறும் என ரசிகர்கள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நம்பிக்கையை தெளிவாக கொடுத்துள்ளது.

மூத்த நட்சத்திரங்கள், மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர், பிரமாண்ட ஸ்கேல் மற்றும் இனிமையான இசை, இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு அட்டகாசமான திரையரங்க அனுபவமாக கொடுக்கும்.
இதையும் படிங்க: அரங்கத்தை அதிரவைக்க காத்திருக்கும் “பவர் ஹவுஸ்” பாடல்...! அனிரூத் கச்சேரியில் கூலி படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறதாம்..!