தமிழ் சினிமாவில் ஹாரர் திரில்லர் வகை படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமான திரைப்படங்களில் முக்கியமான இடத்தை பிடித்த ஒன்று தான் ‘டிமான்ட்டி காலனி’. அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்த படம், வெளியான நேரத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையிலும், தனது வித்தியாசமான கதைக்களம், திகில் கலந்த திரைக்கதை மற்றும் நம்ப வைக்கும் காட்சிப்படுத்தலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இந்த படம், தமிழ் சினிமாவில் ஹாரர் திரில்லர் படங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். இப்படியிருக்க ‘டிமான்ட்டி காலனி’ படம் வெளியான போது, அது வழக்கமான பயமுறுத்தும் பேய் படமாக இல்லாமல், அறிவியல் சார்ந்த விளக்கங்களோடு, உளவியல் திகிலையும் கலந்து சொன்ன விதம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றது. குறிப்பாக, டிமான்ட்டி காலனி என்ற இடத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை, அந்த இடத்தின் மர்மம், அதில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள் மற்றும் அவர்களின் மனநிலை ஆகியவை திரைக்கதையின் முக்கிய பலமாக அமைந்தன. இந்த படம் அருள்நிதிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகவும் அமைந்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் மத்தியில் “டிமான்ட்டி காலனி 2 எப்போது?” என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால், உடனடியாக இரண்டாம் பாகம் உருவாகாமல், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து தான் ‘டிமான்ட்டி காலனி 2’ உருவானது. இந்த நீண்ட இடைவெளி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில், அருள்நிதி மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: அப்பாவி கட்டுமானத் தொழிலாளர்களை தாக்கும் போதை ஆசாமிகள்..! ஆத்திரமாக பேசிய சந்தோஷ் நாராயணன்..!

அவருடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் ‘டிமான்ட்டி காலனி 2’ படம், முதல் பாகத்தின் கதையை விரிவுபடுத்தும் வகையிலும், அதே நேரத்தில் புதிய திருப்பங்களோடும் உருவாக்கப்பட்டது. படம் வெளியான பிறகு, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ஹாரர் திரில்லர் ரசிகர்களுக்கு அந்த படம் ஒரு திருப்தியான அனுபவமாக அமைந்தது. குறிப்பாக, கதையின் தொடர்ச்சி, சில பயமுறுத்தும் காட்சிகள் மற்றும் திரைக்கதையின் சில தருணங்கள் பாராட்டைப் பெற்றன
. இந்த நிலையில், தற்போது ‘டிமான்ட்டி காலனி’ திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘டிமான்ட்டி காலனி 3’ அதிகாரப்பூர்வமாக தயாரிப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், படம் குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. குறிப்பாக, ஹாரர் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, படக்குழு ஒவ்வொரு தகவலையும் திட்டமிட்டு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ தொடர்பான மிக முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இப்பட்டாயாக பர்ஸ்ட் லுக் என்பது எந்த படத்திற்கும் மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஹாரர் திரில்லர் படங்களுக்கு இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், முதல் பார்வையிலேயே படம் எந்த மாதிரியான சூழலில், எந்த அளவிற்கு பயமுறுத்தும் அம்சங்களுடன் உருவாகியுள்ளது என்பதை பர்ஸ்ட் லுக் வெளிப்படுத்தும். அந்த வகையில், ‘டிமான்ட்டி காலனி 3’ பர்ஸ்ட் லுக் எப்படி இருக்கும், அதில் அருள்நிதி எந்த மாதிரியான தோற்றத்தில் இருப்பார், படம் முழுவதும் எந்த அளவிற்கு திகில் அம்சங்கள் இருக்கும் என்பதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக வெளியான முதல் இரண்டு பாகங்களிலும், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்கள் ரசிகர்களுக்கு ஒரு மர்ம உணர்வை கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அதே பாணியில், மூன்றாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்கும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, “டிமான்ட்டி காலனி” என்ற பெயரே ஒரு திகில் உணர்வை ஏற்படுத்தும் நிலையில், இந்த பாகத்தில் அந்த உலகம் மேலும் விரிவடையுமா, அல்லது புதிய மர்மங்கள் சேர்க்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அருள்நிதியை பொறுத்தவரை, ஹாரர் மற்றும் திரில்லர் கதைகளில் தொடர்ந்து நடித்துவரும் நடிகராக அவர் மாறியுள்ளார்.
‘டிமான்ட்டி காலனி’ தொடர் அவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். அதனால், மூன்றாம் பாகத்திலும் அவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்துவும், ஹாரர் மற்றும் மிஸ்டிரி வகை கதைகளில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவர். அவரின் இயக்கத்தில் மீண்டும் ஒரு திகில் உலகம் உருவாகப் போகிறது என்பதே ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. மொத்தத்தில், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு, தமிழ் சினிமா ரசிகர்களிடையே, குறிப்பாக ஹாரர் திரில்லர் ரசிகர்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு உயர்த்தப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ‘டிமான்ட்டி காலனி’ என்ற திகில் உலகம், மூன்றாம் பாகத்தில் எந்த புதிய மர்மங்களோடு திரைக்கு வரப்போகிறது என்பதை அறிய, அனைவரின் பார்வையும் அந்த பர்ஸ்ட் லுக் மீதே திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பஞ்சமா..! அடுத்த படத்தில் 'குரங்கை' கதாநாயகனாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்..!