கோலிவுட்... பாலிவுட்.. மற்றும் ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் தற்பொழுது மிகப் பெரிய ஸ்டாராக வளம் வருபவர் தான் நடிகர் தனுஷ். புதியதாக நடிகர்கள் சினிமாவுக்குள் வந்தாலும் சரி.. அல்லது பழைய நடிகர்கள் சினிமாவில் இருந்து விலகிப் போனாலும் சரி.. அதனை குறித்து இவருக்கு துளி கூட கவலை கிடையாது. ஏனெனில் இவருக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது இவருக்கென்று ஒரு சங்கம் இருக்கிறது இவருக்கென்று சினிமாவில் தனி இடம் இருக்கிறது என்பதால் இவர் எதைக் குறித்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவராகவே இருக்கிறார்.

குறிப்பாக சினிமா திரையுலகில் நடிகைகளுடன் பார்ட்டிகள் என்றாலும் அதில் நடிகர் தனுஷின் பெயர் தான் இடம்பெறும். அதேபோல் யாராவது ஒருவரது குடும்பத்தில் பிரச்சனை என்றாலும் அதிலும் தனுஷின் பெயர்தான் இடம்பெறும். அந்த அளவிற்கு கான்ரவசியில் அதிகமாக சிக்குபவர் தான் நடிகர் தனுஷ். ஆனால் அது உண்மையா..? பொய்யா..? என பலரும் யோசிக்காமல் அவரைக் குறித்து பேசினாலும் அவை அனைத்திற்கும் அவர் கூறும் ஒரே ஒரு பதில், 'எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான்.. என்று சொல்லி, என்னை குறித்து நீங்கள் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை உண்மையாக இருந்தால் கவலைப்படுவேன் இல்லை என்றால் அதைக் குறித்து நான் கவலைப்பட போவதில்லை' என்று சொல்லி அனைத்து விமர்சனங்களையும் உதறி தள்ளிவிட்டு தனது நடிப்பு பணியில் மட்டுமே அதிகமாக கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ்.
இதையும் படிங்க: "மாஸ்டர்" பட விஜய் சேதுபதியை கண் முன் கொண்டு வந்த சூர்யா சேதுபதி..! சண்டை காட்சிகளில் மிரளவிட்ட 'ஃபீனிக்ஸ் வீழான்'.. விமர்சனம் இதோ..!

மேலும் இவரை குறித்து பார்க்கும் பொழுது நடிகர் தனுஷுக்கு நடிப்பில் மட்டுமல்ல தயாரிப்பதிலும் இயக்குவதிலும் பாடல்களை எழுதுவதிலும், நடனத்திலும் அதிக ஆர்வம் உடையவராகவே காணப்படுகிறார். இருந்தாலும் அவரிடம் உங்களுக்கு சினிமாவில் எந்த வேலை மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் எனக்கு இயக்குனராக இருப்பது மட்டுமே பிடிக்கும் என்று கூறுவார். ஆதலால் தான் தற்பொழுது தனக்கான திரைப்படங்களை அவரே இயக்கி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமல்லாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனும் ஆவார். அதனாலேயே இவருக்கு மவுஸ் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் நினைத்தால் அது தான் தவறு. ஏனெனில் ஒரு பொழுதும் நான் ரஜினிகாந்தின் மருமகன் என்று வெளியே சொல்லாத தனுஷ் தனது சொந்த முயற்சியில் தற்பொழுது வரை பாலிவுட் வரைக்கும் சென்று இருக்கிறார் என்றே கூறலாம்.

இப்படி இருக்க சமீபத்தில் நடிகர் தனுஷும் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவாகரத்து பெற்றனர். இதனால் தனுஷ் வேதனையாக இருந்தாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் அனைவரும் மிகவும் வேதனை அடைந்தனர். ஏனெனில் தற்பொழுது திரை பிரபலங்கள் அநேகர் விவாகரத்து என்ற சொல்லில் சிக்கித் தவிக்கும் வேளையில் நடிகர் தனுஷ் இதில் சிக்க மாட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவரும் இதில் மாட்டி இருப்பது பலருக்கும் வேதனை அளித்தது. ஆனாலும் இவர்களது பிரிவு நீண்ட நாட்களுக்கு நீடிக்காமல் அவரது மகனின் முயற்சியால் தற்பொழுது இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்க நீண்ட நாட்கள் சினிமாவில் இடைவெளி எடுத்து இருந்த நடிகர் தனுஷ் குபேரா திரைப்படத்தில் தனது நடிப்பை அசாத்தியமாக வெளிக்காட்டி இருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்து உள்ள திரைப்படம் தான் "குபேரா". இத்திரைப்படம் தமிழில் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் ஹிட் கொடுத்துள்ளது.

இப்படி இருக்க, தனுஷ் அடுத்ததாக ஹிந்தியில் கனிகா டிலான் தயாரிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சனோன் உடன் இணைந்து "தேரே இஸ்க் மெயின்" என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த சூழலில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்திருக்கும் வேளையில் அதனைக் கொண்டாடும் வகையில் படக்குழு சார்பில் நேற்று, மும்பையில் மிட்நைட் பார்ட்டி ஒன்று அரங்கேறியிருக்கிறது. இந்தப் பார்ட்டியில் நடிகைகள் தமன்னா, மிருனாள் தாகூர், பூமிபட்னேகர், கீர்த்திசனோன், தயாரிப்பாளர் கனிகா டிலோன் ஆகியோருடன் நடிகர் தனுஷும் இந்த பார்ட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

விடிய விடிய நடந்த இந்த பார்ட்டியின் புகைப்படங்களை கனிகா தனது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதன் கீழ் " எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன.. எங்கள் வீட்டில் ஒருவராக நடிகர் தனுஷை நாங்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நேசிக்கிறோம்... பழைய மற்றும் புதிய நண்பர்களுடன்... மிகப்பெரிய மகிழ்ச்சியுடன் இதயம் கனிந்த நினைவுகளை கொடுத்ததற்காக நன்றி
" என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: மிர்ச்சி சிவாவின் தலையெழுத்தை மாற்றிய "பறந்து போ"..! 3BHK-க்கு டஃப் கொடுக்கும் படத்தின் ரிவ்யூ இதோ..!