அடடா....தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் அனைத்து திரையுலகிலும் ஹீரோ ஹீரோயின்களின் கிசு கிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. குறிப்பாக சில நடிகர் நடிகைகள் தங்களது நட்பு வட்டத்தை பெருக்கவும் சோர்வுகளை கழிக்கவும் பல இடங்களுக்கு ஜோடியாக சென்று தங்களது பொழுதுகளை கழித்து வருகின்றனர்.
மேலும், இரவு பார்ட்டிகள், ஹோட்டல் சந்திப்புகள், வெளியூர் பயணம் என மறைமுகமாக பழக நினைக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது பாவம், இன்றைய நவீன காலகட்டத்தில் பிரபலமாக இருப்பவர்கள் எங்கு தென்பட்டாலும் உடனே தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து விடுகின்றனர் இன்றைய தலைமுறையினர்.

இப்படி இவர்களது ரகசிய பயணம் நாளடைவில் கிசு கிசுக்களாக வெளியாகி பின் காதல், திருமணம், விவாகரத்து, நட்பு என பல பரிமாணங்களில் அறிக்கைகளை வெளியிடுவர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் நடிகர் விஷால் ஒரு நடிகையுடன் பயணிக்கும் வீடியோ வெளியாகி ட்ரெண்டானது.
இதனை அடுத்து, சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவர்கொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தொடர்ந்து, பார்க், பீச், ஹோட்டல், நீச்சல் குளியல் அரங்கம் என அனைத்து இடங்களுக்கும் சென்ற புகைப்படங்கள் வெளியானது. இப்படி கிசுகிசுக்களுக்கு கமா மட்டுமே தவிர என்றும் ஃபுல்ஸ்டாப் கிடையாது என்பதை நிருமித்து இருக்கின்றனர் அடுத்த ஜோடிகள்.
இதையும் படிங்க: நகை கடை திறப்புக்கு கிளாமர் லுக்..! உச்சபட்ச கிளாமர் உடையில் தோன்றி ஷாக் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

மலையாளத்தின் மாபெரும் வெற்றிப் படமான பிரேமம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தில் அவரை கண்ட பின் பல இளைஞர்கள் அனுபமா போல் தனக்கு காதலி வேண்டும் என பித்து பிடித்து சுற்றினர். அதன் பின்னர் பிருத்விராஜ் மற்றும் வேதிகா நடித்த "ஜேம்ஸ் & ஆலிஸ்" என்ற மலையாளப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். மலையாளத்தை அடுத்து தெலுங்கில் அனுபமாவிற்கு வாய்ப்பு கிடைக்க, நிதின் மற்றும் சமந்தா ரூத் பிரபுவுடன் "ஆ..ஆ" என்ற படத்தில் நடித்து, அதன் பின் தனது முதல் மலையாள படமான பிரேம் படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து கொடுத்தார்.

இப்படி மலையாளம் மற்றும் தெலுங்கில் அறிமுகமான அனுபமா, எப்பொழுது தமிழ் திரையுலகில் தோன்றுவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த பொழுது, திடீரென தனுஷ் நடிப்பில் வெளியான டபுள் ஆக்ஷன் படமான "கொடி" என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். ரசிகர்களை மட்டுமல்லாமல் அப்படத்தில் த்ரிஷாயவையே அலற விட்டார். இதனை தொடர்ந்து தள்ளிப் போகாதே, சைரன், டிராகன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' மற்றும் 'லாக் டவுன்' போன்ற படங்களில் நடிக்கிறார்.

இந்த சுழலில், நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 2019ல் வெளியான "ஆதித்ய வர்மா" படத்தின் மூலம் முன்னணி கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து 2020ல் வெளியான "வர்மா" படத்தின் மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கினார். பின் 2022ம் ஆண்டு தனது தந்தைக்கே மகனாக நடித்து வெளியான "மகான்" திரைப்படம் மூலமாக யாரும் எதிர்பாராத வகையில் தற்பொழுது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்க, தற்பொழுது நடிகர் துருவ் விக்ரம், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஜோடி சேர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைசன்' படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்பாட்டிபை என்ற மியூசிக் ஆப் ஒன்றில் 'ப்ளூமூன்' என்ற தனிப்பட்ட கணக்கில் நடிகை அனுபமா மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இருவரும் ஒருவருக்கொருவர் உதட்டுடோடு உதடு வைத்து அன்புடன் முத்தங்களை பகிரும் புகைப்படம் வெளியானது. இந்த காட்சிகள் அந்த ஆப்பில் வெளியான சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. ஆனாலும், அதற்குள்ளாக பலர் அந்த காட்சிகளை இணையத்தில் பார்த்து விட்டதால் தற்பொழுது இருவரது பெயரும் இணையத்தில் அடிபட தொடங்கியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா அல்லது 'பைசன்' பட ஃப்ரமோஷனா என குழம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!