தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த ‘டியூட்’ திரைப்படம். காதல், காமெடி, உணர்ச்சி கலந்த இளைய தலைமுறை ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படம், வெளியான சில நாட்களிலேயே வசூல் வெடிகுண்டாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட ‘டியூட்’ திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிகுந்த செலவில் தயாரித்துள்ளது. இந்த நிறுவனமே தெலுங்கு திரைப்பட துறையில் புஷ்பா, டீயர் காம்ரேட், ஜனதா கேரேஜ் போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன், புகழ்பெற்ற இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவரது முதல் படமாக உருவான ‘டியூட்’ தற்போது தமிழ் – தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோவாக நடித்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் தனது இயல்பான நடிப்பாலும், நகைச்சுவை டைமிங்காலும், காதல் காட்சிகளில் வெளிப்படுத்திய உண்மையான உணர்வுகளாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பின்பு காதல் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். அவரது ஸ்கிரீன் பிரெசென்ஸ் மற்றும் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், படத்தில் பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார், அனீஷா விக்கி, முரளி சர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையமைப்பை சாய் அபயங்கர் மேற்கொண்டுள்ளார்.
அவர் வழங்கிய பாடல்கள், குறிப்பாக ‘மச்சான் எனக்கு அவளே வேணும்’ மற்றும் ‘லவ் மீ லைக் யூ டூ’ ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. பாடல்கள் மட்டும் அல்லாமல், பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிகளை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கே.வி. கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அதேசமயம் சுபாஷ் கரண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். மொத்தத்தில், ‘டியூட்’ ஒரு உயர்தர கமெர்ஷியல் பேக்கேஜாக அமைந்துள்ளது. இந்த படத்தின் கதை ஒரு இளைய தலைமுறை காதல் கதை என்றாலும், அதில் நகைச்சுவை, உறவு மதிப்பு, சமூக உண்மை போன்ற அம்சங்களும் கலந்துள்ளன. பிரதீப் நடித்த கதாபாத்திரம், ஒரு சாதாரண இளைஞனின் காதல் வாழ்க்கையைச் சுற்றி அமைகிறது. அவரது காதலில் ஏற்படும் திருப்பங்களும், தவறான புரிதல்களும் கதை முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளன. காதல் காட்சிகளில் மமிதா – பிரதீப் ஜோடி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு வழியாக கவினின் "மாஸ்க்" பட ரிலீஸ் அப்டேட் கிடைச்சாச்சு..! சொன்ன மாதிரியே தேதியை வெளியிட்ட படக்குழு..!

மொத்தத்தில், படம் ஒரு உணர்ச்சி, நகைச்சுவை, காதல் கலந்த குடும்ப விருந்து எனச் சொல்லலாம். இப்படி இருக்க ‘டியூட்’ படம் கடந்த அக்டோபர் 17ம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது. வெளியாவதற்கு முன்னரே டிரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததால், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்தது. படம் வெளியான உடனே, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் இருவரிடமும் ஒரே மாதிரியான நேர்மறை விமர்சனங்கள் வந்தன. பிரதீப்பின் நகைச்சுவை பேச்சுகள், மமிதாவின் நடிப்பு, சாய் அபயங்கரின் இசை ஆகியவை படத்தின் முக்கிய பலங்களாகக் கூறப்பட்டன. மேலும் படம் வெளியானது முதல் 6 நாட்களிலேயே, ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் முக்கியமாக, தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் படம் எதிர்பாராத அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கூட படம் பண்டிகை வெளியீடாக நல்ல திரையரங்கு காட்சிகளைப் பெற்றுள்ளது. பெரிய படங்கள் வெளியான சூழலிலும், ‘டியூட்’ தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், மிகவும் உணர்ச்சிபூர்வமாக கூறினார். அவர் பேசுகையில், “டியூட் படத்தை இவ்வளவு அன்பாக வரவேற்ற தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் காட்டிய அன்பு உண்மையில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் ஹீரோவாக நடித்த லவ் டுடே மற்றும் ரிட்டர்ன் ஆப் த டிராகன் ஆகிய படங்களை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் விரும்பினர். ஆனால் இப்போது, அந்த இரண்டு படங்களை விட ‘டியூட்’ படத்திற்காக நீங்கள் காட்டும் பாசம், அன்பு இன்னும் அதிகம். தயாரிப்பாளர்கள் கூறியபோது தெரிந்தது — ‘டியூட்’ வசூல் எனது முந்தைய படங்களை விட உயர்ந்திருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய கீர்த்தீஸ்வரன், மைத்ரீ மூவி மேக்கர்ஸ், மற்றும் என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன்” என்றார்.
அவரது இந்த உரை ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ‘டியூட்’ தமிழ் சினிமாவுடன் சேர்த்து தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் கூட, படத்திற்கான விமர்சனங்கள் மிகவும் நேர்மறையாக வந்துள்ளன. அங்கு பிரதீப்பை ரசிகர்கள் "சின்ன விஜய் தேவராகொண்டா" என்று அழைத்து வருவது சுவாரஸ்யம். படத்தின் தெலுங்கு வசூல் மட்டும் ரூ.60 கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்கு திரையுலகில் ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. ‘டியூட்’ படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளார். அவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படம் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நடித்த ‘ரிட்டர்ன் ஆப் த டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ‘டியூட்’ மூன்றாவது பெரிய ஹிட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆகவே தீபாவளி திருவிழாவில் ரசிகர்களுக்கு இனிமையான அனுபவத்தை அளித்த ‘டியூட்’, தற்போது 2025 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இளைய தலைமுறையினரை ஈர்க்கும் கதை, உற்சாகமான இசை, பிரதீப்பின் இயல்பான நடிப்பு, மமிதாவின் கவர்ச்சி என இவை அனைத்தும் இணைந்து ‘டியூட்’ திரைப்படத்தை ஒரு வணிக ரீதியான பெரும் வெற்றியாக்கியுள்ளது. பிரதீப் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல். ஆனால் ரசிகர்களின் ஒரே கோரிக்கை, டியூட் 2 வேண்டாம், ஆனால் பிரதீப் மாதிரி இன்னொரு ஹார்ட் டச் ஸ்டோரி வேணும் என்பது தான்.
இதையும் படிங்க: எனக்கு விவாகரத்து ஆனபொழுது கொண்டாடினவங்க தான நீங்கயெல்லாம்..! நடிகை சமந்தா காட்டம்..!