தமிழ் திரையுலகில் தனது ஐடி வேலையை விட்டு, படம் எடுக்க நினைத்து, "ஷார்ட் பிலிம்ஸ்" மூலமாக தனக்கான பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்து, பின் ரவி மோகனை வைத்து, 90ஸ் காலத்து நினைவுகளையும், 90ஸ் காதலையும், அப்பொழுது உள்ள விளையாட்டையும், பீலிங்ஸையும் கலந்து மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்கும் விதத்திலும் "கோமாளி" என்ற படத்தை மக்களுக்கு கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் "பிரதீப் ரங்கநாதன்".

இப்படம் வெற்றியை தொடர்ந்து, தானே ஹீரோவாக நடிக்க தயாராகி அவரது இரண்டாவது படத்திற்கான கதைகளை முடித்துவிட்டு அதற்கான நடிகையை தேடிய பொழுது, பிரதீப் நடிக்கிறார் என தெரிந்தவுடன் பல ஹீரோயின்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்து சென்றனர். ஆனால் அதற்காக வருத்தப்படாமல் தனது முழு நம்பிக்கையையும் தன் உழைப்பின் மீது வைத்து பயணம் செய்த பிரதீப்புக்கு, இவனா என்பவர் நடிகையாக கிடைக்க, சிறப்பாக படத்தை இயக்கி வெளியிட்டார், இத்தனை வேதனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் இந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனை அடுத்து பிரதீப் என்ன படம் எடுப்பார் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்க ஒரு நாள் "பல நாள் போட்டோ நினைவு சாலஞ்சை" நினைவு வைத்து, பத்து வருடத்திற்கு முன் அவரது சீனியரும் அவரும் பேசிக்கொண்ட "மச்சா நேர்ல பாக்கத்தான் ஒரு மாதிரி இருக்க ஆனா ஃபிரேம்ல சூப்பரா இருக்க " என்ற அந்த பதிவை நினைவு செய்து படத்திற்கான முதல் இன்றோ வீடியோவை வெளியிட்டனர்.
இதையும் படிங்க: "கூலி" பட இசைவெளியீட்டு விழா வீடியோவால் கலங்கடித்த படக்குழு..! இன்னும் என்னலாம் பண்ணப்போறாங்களோ..!

இதனை அடுத்து படத்தின் பெயர் என்ன என குழம்பி போய் இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெயர் "டிராகன்" என டீசர் மூலமாக கூறி படத்திற்கான ஹைப்பை ஏற்றினர். பின் ஒருவழியாக இரண்டு ஹீரோயினுடனும், விஜே சித்து, ஹர்ஷத்கான் முதலியானோருடன் பிரதீப் நடித்த டிராகன் படம் பிப்ரவரி மாதம் வெளியாகி தற்பொழுது மெகா ஹிட் அடித்தது. இப்படி தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அதன் பிறகு ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராகவும் வெற்றிகரமாக பயணத்தைத் தொடங்கியவர் பிரதீப் ரங்கநாதன், "டிராகன்"படத்தில் நடித்த பின், தற்பொழுது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இருக்க, ஹரோவாக வலம் வரும் பிரதீப் தற்போது சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக இருந்த கீர்த்தி ஸ்வரன் இயக்கும் புதிய திரைப்படமான ‘டியூட்’ படத்தில் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்ற இந்தப் படம், முழுமையாக இளம் தலைமுறையினரின் காதல், இசை மற்றும் உறவுகளைக் கொண்ட ஒரு நவீன ரொமான்டிக் கதையாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, சரத் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். மேலும், ‘டியூட்’ என்ற தலைப்பே இப்படம் ஒரு இசை சார்ந்த கதையம்சம் கொண்ட காதல் கதையாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், இன்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை ‘டியூட்’ படக்குழு சிறப்பாக கொண்டாடியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் இந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும், கொண்டாங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களில், மமிதா பைஜு, இயக்குநர் கீர்த்தி ஸ்வரன், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் பிரதீபை வாழ்த்தி கேக் வெட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், பிறந்த நாள் வாழ்த்துக்களோடு, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அந்தப் பதிவின் இறுதியில் ஒரு முக்கியமான தகவலும் இருந்தது.

அதாவது, " ‘டியூட்’ திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிடப்படும்" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி என்றாலே பெரிய நட்சத்திரங்களின் படம் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' அந்த போட்டி களத்தில் ஒன்றாக இணைவது உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: சந்தோஷத்துல "கூலி" பட கேரக்டரை போட்டுடைத்த 'நடிகை ஸ்ருதி ஹாசன்'...அதிர்ச்சியில் படக்குழு..!