சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, குறுகிய காலத்திலேயே மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றாக அமைந்தது ‘எதிர்நீச்சல்’.

பெண்களின் வாழ்க்கைப் போராட்டம், சமூக அழுத்தங்கள், குடும்ப அரசியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்ந்த முதல் பாகம்,

ஒளிபரப்பான ஒவ்வொரு நாளும் டிஆர்பி பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்து, சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது.
இதையும் படிங்க: திடீரென நெஞ்சில் கை வைத்த மர்ம நபர்..! செய்வதறியாது ஷாக்கில் உறைந்த நடிகை பார்வதி..!

அந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே வேகத்திலும் அதே எதிர்பார்ப்புகளுடனும் தொடங்கப்பட்டது தான் ‘எதிர்நீச்சல்’ 2வது பாகம்.

தொடரின் கதைக்களம் குறித்து இயக்குநர் திருச்செல்வம் பல்வேறு நேர்காணல்களில் பேசும்போது, “இந்த தொடர் பெண்களை சாதிக்க வைக்கும் கதையாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, பெண்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டமைக்கும் விதமாக கதை நகரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது.

ஆனால், இரண்டாவது பாகம் தொடங்கி சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், கதை நகர்வைப் பார்த்தால், இன்னும் வில்லன்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக, தொடரில் பெண்கள் புதிய தொழில்களைத் தொடங்குவது, தங்களுக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இது ஒருபுறம் பெண்களின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தாலும், மறுபுறம் வில்லன்கள் செய்த அநீதிகளுக்கு உரிய தண்டனை கிடைத்ததாகத் தோன்றவில்லை என்பதே ரசிகர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக, முதல் பாகத்தில் பார்வையாளர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கிய சில கதாபாத்திரங்கள், இரண்டாவது பாகத்திலும் தண்டனை இன்றி தப்பித்து செல்லும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தொடரில் காணப்படும் எளிமையான, குடும்பப் பெண் தோற்றத்திற்கு முற்றிலும் மாறாக, இந்த போட்டோ ஷூட்டில் அவர் மாடர்ன் மற்றும் எலிகன்ட் லுக்கில் தோன்றியுள்ளார்.
இதையும் படிங்க: படம் ரிலீஸில் ஏமாற்றம் நடந்திருக்கலாம்.. ஆனால் “வா வாத்தியார்”ஏமாற்றத்தை கொடுக்காது - இயக்குநர் நலன் குமாரசாமி