தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பகத் பாசில். தனித்துவமான கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்து வரும் இவர், இன்று மலையாள சினிமாவின் நம்பகமான முகமாக மட்டுமின்றி, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடமும் தனக்கென ஒரு மைல் ஸ்டோன் பதித்து நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இந்த நிலையில், பகத் பாசில் தற்போது நடித்துள்ள புதிய மலையாள திரைப்படமான ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’ தற்போது வெளியாகவுள்ளதுடன், அதன் டிரெய்லர் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "கூலி" திரைப்பட வெளியீட்டிற்கு தடை..! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
இப்படத்தை அல்தாப் சலீம் இயக்கியுள்ளார், இவர் இதற்கு முன்பு எழுத்தாளராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றியவர். இந்த படம் அவர் இயக்கும் முழு நீள திரைப்படமாகும். 'ஓடும் குதிரை சாடும் குதிரை' எனும் தலைப்பே ஒரு வித்தியாசமான கற்பனையைக் கிளப்புகின்றது. இப்படத்தில் பகத் பாசில், மிகுந்த ஆழமுள்ள, நுட்பமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். தற்போது மலையாளத்திலும், தமிழிலும் இடம் பிடித்திருக்கும் இளம் நடிகை கல்யாணி, இதில் ஒரு சாலிட் கதாநாயகியாக கவனம் ஈர்த்துள்ளார். மேலும், இணைய வழி தொடர்களில் நன்றாக வளர்ந்து வரும் இளம் நடிகை ரேவதி பிள்ளை முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் கதையின் பிணைப்பை மேலும் உற்சாகமாக மாற்றும் வகையில் உருவாகியிருக்கிறார் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளது. வணிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் இப்படம் தரமான ஒன்றாக அமையக்கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டர், வித்தியாசமான டிசைனிலும், குணாதிசயத்தையும் உணர்ச்சியையும் பிரதிபலிக்கும் ரீதியிலும் அமைந்திருந்தது. அதுவே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்க இப்போது வெளியாகியுள்ள டிரெய்லர், பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வகையில் உற்ச்சாகப் படுத்தியுள்ளது. ரசிகர்களை ஈர்க்கும் காட்சிகள், துல்லியமான வசனங்கள், நுட்பமான படப்பிடிப்பு மற்றும் அனுபவசாலியான நடிகர்களின் நடிப்பு என இவை அனைத்தும் டிரெய்லரில் ஒருவிதமான ஹைப்பை உயர்த்தியுள்ளது. படத்தின் மையக்கருத்தாக மனித உறவுகள், வாழ்க்கையின் பரபரப்புகள், தனிமை, லட்சியங்கள் ஆகியவை பின்னிப்பிணைந்துள்ளன.
👉🏻 Odum Kuthira Chaadum Kuthira |Official Trailer | Fahadh Faasil, Kalyani | Althaf Salim | click here 👈🏻
குறிப்பாக பகத் பாசில் ஏற்கும் கதாபாத்திரம் மிகுந்த சிக்கலானது என்றும், அவரது நடிப்பு அந்த வலுவை நிறைவாகக் கொண்டு வந்திருப்பது போல் டிரெய்லரில் தெரிகிறது. இந்த நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. மலையாள திரையுலகிலும், மற்ற மாநிலங்களிலும் பலரும் இப்படம் மீது எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. தனித்துவமான கதைகள் மற்றும் மனதைக் கவரும் திரைப்படங்களுக்காகவே பகத் பாசிலை ரசிகர்கள் மதிக்கின்றனர். அவர் நடித்த ஒவ்வொரு படமும் அவருடைய தேர்ந்தெடுக்கும் தரத்தை நிரூபிக்கிறது. அந்த வகையில் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’ என்ற இந்தப் படம், அவரது திரைப்பயணத்தில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கல்யாணி மற்றும் ரேவதி பிள்ளை போன்ற இளம் திறமையான நடிகைகளின் நடிப்பும், இந்தப் படத்தை ரசிகர்களிடையே விரைவில் இடத்தை பிடிக்கச் செய்யக்கூடியதாக இருக்கலாம். எனவே 'ஓடும் குதிரை சாடும் குதிரை' ஒரு வெறும் கதை அல்ல, அதற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கைப் பயணத்தின் கதை என டிரெய்லர் மூலம் நன்றாக தெரிகிறது. தனித்துவமான தலைப்பும், தரமான கலைஞர்களும் இணைந்திருக்கும் இப்படம், ஆகஸ்ட் 29ம் தேதி ரசிகர்களிடையே எவ்வாறு வரவேற்பை பெரும் என்பதை காண அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆகவே, படம் திரையரங்கில் வெளியாவதை எதிர்நோக்கும் ரசிகர்கள், டிரெய்லரை பார்த்து விட்டு சமூக வலைதளங்களில் நல்ல விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். இது படத்தின் வெற்றியை முன்பே கணிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் அஜித் குமார் படத்தில் இயக்குநர் மிஷ்கின்..! எந்த ரோலில் நடிக்க இருக்கிறார் தெரியுமா..?