தமிழ் சினிமாவில் பல துறைகளில் தனது அட்டகாசமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ள இரண்டு பிரபலங்களின் படத்தை காண தான் இன்று இந்திய மக்கள் ஆவலுடன் உள்ளனர். அது தான் கோடான கோடி ரசிகர்களின் இதயத்தில் நீண்ட காலமாக இடம் பிடித்துள்ள வடிவேலு மற்றும் மலையாள சினிமாவின் புகழ் பெற்ற ஃபஹத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’திரைப்படம். இப்படம், ட்ராவலிங் திரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி அனைவரது எதிர்பார்ப்பையும் துண்டியுள்ள இப்படம் நாளை அனைத்து திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரிதாகவே உள்ளது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ திரைப்படத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி, படத்தின் கிரியேட்டிவ் டைரக்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார். அவர்களது இணைந்த முயற்சியின் பலன் தான் இந்த படத்தின் கதையில் காணப்படும் கருத்துக்கள், மனித உணர்வுகள் மற்றும் சம்பந்தப் பிணைப்புகளின் விளக்கம் முதலியவை. இந்த திரைப்படத்தில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் மட்டுமல்லாமல், பல முன்னணி துணை நடிகர்களும் களமிறங்கியுள்ளனர். கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களது ஒட்டுமொத்த நடிப்பு, கதையின் வழித்தோன்றல்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்போகிறது இந்த படம். இப்படி இருக்க, சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபஹத் பாசில், தமிழ்சினிமா மற்றும் தன்னுடைய இளம் பருவ அனுபவங்களை பற்றி பேசியிருக்கிறார். அதன்படி அவர் பேசுகையில், "நான் முதன்முதலில் தியேட்டரில் தமிழில் பார்த்த திரைப்படம் ‘பாட்ஷா’ தான். அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு தருணம். என் நண்பர்களுடன் ஸ்கூலை கட் அடிச்சுட்டு சென்று பார்த்தோம்.
இதையும் படிங்க: விலையே ரூ.10 லட்சமா..! 'அம்பானி' கூடவாங்க முடியாதாம்.. நடிகர் பகத் பாசில் யூஸ் பண்ணும் ஃபோன் இதுதான்..!
அந்த படம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 'என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு', 'உண்மைய சொன்னேன்' போன்ற வசனங்கள், இன்னும் என் மனதில் உயிரோடு இருக்கின்றன. அப்போது நான் தமிழை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அந்த உணர்வுகள், அந்தக் கோபங்கள், அந்த 'மாஸ்' என்று சொல்லக்கூடிய நெருப்பு எனக்குள் நுழைந்தது" என உணர்ச்சி பொங்க பேசினார். ஃபஹத்தின் இந்த பேச்சு, தமிழ் சினிமாவின் மீது அவரது உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவேலு இருக்கிறார். சமீபத்திய படங்களில் மீண்டும் அவர் தெளிவான கதாபாத்திரங்களில் நடித்து வருவதைப் போல, ‘மாரீசன்’ படத்திலும் அவரது காமெடியுடன் கூடிய நடிப்பு இருப்பது ட்ரெயிலரிலேயே தெரிந்தது. ஆகவே, ‘மாரீசன்’ திரைப்படம் ஒரு சாதாரண கிராமிய கதையை தாண்டி, அந்த ஊர்களின் சமூக வரலாறுகள், மனித உறவுகள், பயணங்களின் மூலமாக சந்திக்கப்படும் சிக்கல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ட்ராவலிங் திரில்லர் ஆக உருவாகியுள்ளது.

மேலும் இந்நிலையில் நாளை வெளியாக உள்ள இப்படம், Box Office-ல் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்களும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: அமிதாப், அமீர் கான் காருக்கு ரூ.38 லட்சம் ஃபைன்.. கர்நாடக போக்குவரத்து துறை அதிரடி..!!