பாலிவுட்டின் ஜாம்பவான்களாக விளங்கும் அமிதாப் பச்சன் மற்றும் அமீர் கான், இந்திய சினிமாவில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அமிதாப் பச்சன், தனது 80 வயதிலும் திரையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

1969ல் ‘சாத் ஹிந்துஸ்தானி’ மூலம் அறிமுகமான இவர், ‘ஜஞ்ஜீர்’, ‘தீவார்’, ‘ஷோலே’ போன்ற படங்களால் ‘ஆங்கிரி யங் மேன்’ என புகழப்பட்டார். அவரது கம்பீரமான குரல், உணர்ச்சிமிக்க நடிப்பு மற்றும் பன்முகத்திறன், அவரை தலைமுறைகளை கடந்து ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்க வைத்துள்ளது. சமீபத்தில், ‘கல்கி 2898 AD’ படத்தில் அசோக் சிங்காக அவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. தற்போது, பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் படத்தில் நடிகர் அப்பாஸ்..! தமிழ்ச் சினிமாவில் 'ரீ என்ட்ரி' கொடுத்து அசத்தல்..!
மறுபுறம், அமீர் கான், ‘பெர்ஃபெக்ஷனிஸ்ட்’ என அழைக்கப்படும் பாலிவுட்டின் மற்றொரு மாபெரும் நட்சத்திரம். 1988ல் ‘கயாமத் செ கயாமத் தக்’ படத்தின் மூலம் பிரபலமான இவர், ‘லகான்’, ‘தங்கல்’, ‘3 இடியட்ஸ்’ மற்றும் ‘பிகே’ போன்ற படங்களால் உலகளவில் புகழ்பெற்றார்.
அமீர், தனது படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும், சமூக மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை மையப்படுத்துவதிலும் தனித்து நிற்கிறார். அவரது ‘சத்யமேவ ஜயதே’ தொலைக்காட்சி நிகழ்ச்சி, சமூகப் பிரச்சினைகளை வெளிச்சமிட்டது. தற்போது, ஆமிர் ‘சீதாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இருவரும் தங்கள் தனித்துவமான நடிப்பு மற்றும் சமூகப் பங்களிப்பால் இந்திய சினிமாவை உயர்த்தியுள்ளனர். அமிதாப் பச்சனின் காலமற்ற கவர்ச்சியும், ஆமிர் கானின் புதுமையான அணுகுமுறையும் பாலிவுட்டின் பொக்கிஷங்களாக திகழ்கின்றன.
இந்நிலையில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அமீர் கான் ஆகியோரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு கர்நாடக போக்குவரத்து துறை ரூ.38.26 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த கார்கள் சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களைச் செலுத்தாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெங்களூரு போக்குவரத்து துறையின் கவனத்திற்கு வந்ததையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த கார்கள் ‘KGF’ திரைப்படத் தயாரிப்பாளரான பிரபல தொழிலதிபர் KGF பாபுவால் வாங்கப்பட்டு, பின்னர் அமிதாப் மற்றும் ஆமிர் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இந்த வாகனங்கள் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தேவையான வரி செலுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனால், ஒவ்வொரு காருக்கும் சுமார் ரூ.19 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. போக்குவரத்து துறை அதிகாரிகள், இந்த அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவம், பிரபலங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இது குறித்து அமிதாப் பச்சனோ, அமீர் கானோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. மேலும் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டிஸ்..! ED அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நீதிபதி..!