தமிழில் வெளிவந்த மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதியை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. இவர் ஈரம், அரவான், போன்ற படங்களை நடித்து இருந்தாலும், இவரது சிறந்த படம் என்றால் அது மரகத நாணயம் தான்.

இந்த மரகதநாணயம் படத்தில் ஒன்றாக நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வேளையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என சமூக வலைகளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் நடிகர் ஆதி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆதி கூறுகையில், நிக்கி கலராணியுடன் தனது காதல் கலந்த திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் சில யூடியூப் சேனல்கள் பணம் சம்பாரிக்கும் நோக்கில், எங்களுக்கு விவாகரத்து ஆகபோவதாக கூறி வீடியோ வெளியிடுவது இருவருக்கும் வலியை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் கோபமாக கூறி இருந்தார்.
இதையும் படிங்க: 3BHK படத்தை பார்த்து அழுதுட்டேன்..! கனவு நினைவாகும் தருணம் இப்படித்தான் இருக்கும் - ஸ்டாலின் பாலுச்சாமி பேட்டி..!

இப்படி இருக்க சமீபத்தில், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஆதி நடித்துள்ள திரைப்படம் தான் சப்தம். இப்படம் பல போராட்டங்களை கடந்து சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வந்த நிலையில், அப்பொழுது இந்த படத்தை சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் மட்டும் நெகட்டிவ்வாக விமர்சனம் வைத்திருந்தார். அஅவர் கூறுகையில்,தமிழ் சினிமாவில் ஃபேண்டஸி ஹாரர் மற்றும் சவுண்ட் ஹாரர் என 2 வித்தியாசமான பேய் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரும் விதமாக இல்லை அதுமட்டுமல்லாமல் நல்ல சீன் என்று ஒன்று கூட என் கண்களில் தென் படவில்லை என்றும் சப்தம் படத்தை பற்றி டிரைக்டர் லெட்டர் எல்லாம் கொடுத்து சொல்லும் பொழுது படம் சவுண்ட்-ல் பிரமாண்டம் இருக்கும் என நினைத்தேன்.

ஆனால் சப்தம் படம் ஒரே சத்தமாக இருக்கிறது மற்றபடி அந்த படத்தில் நல்ல கதையோ திரைக்கதையோ இல்லை என காட்டமாக பேசி இருந்தார். மேலும், படத்திற்கு சத்தம் தான் அவசியம் என இயக்குனர், அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் லெட்டர் மூலம் விளக்கம் கொடுத்தார். அதில் படத்தின் முக்கியமான சிறப்பம்சம் சத்தம் என்பதால் ஒலியின் அளவை சரியாக வைத்து கொள்ளுங்கள் இல்லை எனில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் என தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் இயக்குனரையும் நாயகனையும் பாராட்டி வந்த நிலையில் தற்பொழுது இந்த படம் ஓடிடியில் வெளியிட படாத பாடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

இந்த நிலையில், இப்படகுழுவினர் தற்பொழுது பைனான்சியர் தரப்பிலிருந்து கொடுத்த சிக்கல்களால் மாட்டி தவித்து வருகின்றனர். காரணம் இப்படத்தின் பைனான்சியருக்குத் தரவேண்டிய தொகையை சொன்னபடி வெளியீட்டிற்கு முன்பு தராத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அது குறித்த விசாரணை நடந்து முடிந்த பின் இப்படத்தின் பைனான்சியருக்குத் தரவேண்டிய ரூ.1 கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை சில தவணைகளில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

பணம் முழுவதுமாக செலுத்தும் வரை ஓடிடி வெளியீட்டிற்கு தடை விதித்துள்ளார் நீதிபதி. இந்த சூழலில், ஃபைனான்சியர் செய்த பிரச்சனையால் படம் வெளியிட்டே தாமதமாக நடந்தது பிப்ரவரியில் வெளியாக வேண்டிய படம் மார்ச் 1ம் தேதி வெளியானது. ஆதலால் படம் வெளியான போது பெரிதாக விளம்பரப்படுத்தவில்லை. ஓடிடியில் வெளியாகி வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கும் இப்படி சிக்கல் வைத்தால் என்ன செய்வது என தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்.
இதையும் படிங்க: மிரட்டலாக அட்டகாசமாக வெளியானது கண்ணப்பா படத்தின் மேக்கிங் வீடியோ..! இணையத்தில் வைரல்..!