இதுவரை தமிழில் ராமாயணம் மகாபாரதம் போன்ற வரலாற்று சிறப்புகளை போற்றும் படைப்புகளை பார்த்து இருப்போம். ஆனால் அதனை தொடர்ந்து வருகிறது "கண்ணப்பா திரைப்படம்". இயக்குனர் லிங்குசாமி மகாபாரதத்தை இயக்க உள்ளதாக கூறிய நிலையில் இந்த படம் பெரிதும் வரவேற்புள்ளதாக உள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்மிக படம் என்றால் அது "கண்ணப்பா".

காரணம் ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்க தயாராகி கடந்த ஆகஸ்ட் 18, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முழுப்படமாக்கப்பட்டு உள்ளது "கண்ணப்பா" திரைப்படம்.
இதையும் படிங்க: தொடர்ந்து தடங்கலாகும் கண்ணப்பா பட ட்ரைலர் நிகழ்ச்சி.. முதலில் ஹார்ட் டிஸ்க் இப்ப விமான விபத்து.. அடுத்து என்னவோ...!

இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும்,

பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் அதிரடியாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் கிராபிக் காட்சிகள் அடங்கிய முக்கியமான ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு இருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத் விமான விபத்து காரணமாக இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டை ஒரு நாள் ஒத்திவைத்து இந்தூரில் வெளியிட்டனர்.

இப்படி இருக்க, அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் கண்ணப்பா படத்தின் படத்தின் மேகிங் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னடா இது கண்ணப்பா படத்துக்கு வந்த சோதனை..! படம் வெளியாகும் நேரத்தில் ஹார்ட்டிஸ்க்கை பறிகொடுத்த டீம்..!