தமிழ் திரையுலகில் நேற்று அசாத்திய திரைப்படமாக இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்த வேளையில் தற்பொழுது குடும்பப்பாங்கான திரைப்படங்கள் வெளியாவதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அந்த வகையில் ஜூலை நான்காம் தேதியான நேற்று ஒரே நாளில், சூர்யா சேதுபதியின் "ஃபீனிக்ஸ் வீலான்", சரத்குமார் தேவயானியின் "3BHK" மற்றும் மிர்ச்சி சிவாவின் "பறந்து போ" ஆகிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருப்பதால் எந்த திரைப்படத்தை பார்ப்பது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி மகனான சூர்யா சேதுபதியின் திரைப்படம் பழிவாங்கும் படலமான திரைப்படமாக இருக்கிறது.. மேலும் படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளையே கொண்டு இருக்கிறது. இத்திரைப்படம் குடும்பங்கள் பார்த்து ரசிப்பதை விட இளசுகள் பார்த்து ரசிக்கும் வண்ணமாகவே இருப்பதால் பெரிதளவில் குடும்ப ரசிகர்கள் இந்த திரைப்படத்தை தவிர்த்து இருக்கின்றன.
இதையும் படிங்க: என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!

அதே சமயம், இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ள திரைப்படம் தான் "3BHK". இன்று வெளியான இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீடு கட்டுவதற்காக போராடி தோற்றுப்போகும் அப்பா சரத்குமார், அப்பா கனவை நினைவாக்க போராடும் சித்தார்த், ஆனால் அவருக்கு படிப்பு கைகொடுக்காமல் போகவே மிகவும் போராடி முயற்சி செய்து கடைசியில் வீடு வாங்குவாரா..? மாட்டாரா..? என்பதே இப்படத்தின் கதையாக உள்ளது.

மேலும் வாழ்க்கையில் தோற்றுப் போகும் நடிகர் சரத்குமார் தனது கனவை தனது மகனான சித்தார்த்தின் மீது வைக்கிறார். ஆனால் சித்தார்த் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய சாமானிய இளைஞனின் கண்ணீரை பிரதிபலிக்கும் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. உண்மையில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் மிகவும் அல்டிமேட்டாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படம் குறித்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஸ்டாலின் பாலுச்சாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் படம் குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்.

அவரது பதிவில், " 3BHK எல்லோரும் தவற விடாமல் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். மனசுக்கு ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு படம்.. அம்மாவும் நானும் தான் படம் பார்த்தோம். ஒரு நல்ல குடும்ப படத்தை எடுத்து இருக்கீங்க. ஒட்டு மொத்த குழுவுக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும். எங்க அம்மா பேரு சாந்தி தான், படத்தில் அப்படியே என்னையும் அப்பாவையும் அப்படியே பொருத்தி பார்க்க முடிஞ்சது. நம்ம வீட்டோட கதையை எந்த மிகையும் இல்லாமல் எடுத்தற்கும் இயல்பாக எல்லோரையில் திரையில் காட்டியதற்கும் சொல்லிகிட்டே போகலாம்... படத்தை எல்லோரும் தியேட்டரில் போய் பார்க்கணும். விட்டதை பிடிச்சிட்டிங்க ஶ்ரீராம். இந்த படத்தில் மனசுக்குள் இருந்த பரிதவிப்பை எல்லாம் இடைவெளிக்கு பின்னான காட்சி பூரணமாக்கிடுச்சு... இன்னும் சொல்ல நிறைய இருக்கு.. கடவுளுக்கு ரொம்ப நன்றி... உங்களோட அம்மாவையும் மனைவி பாப்பா எல்லோரையும் நினைச்சுகிறேன்.. இப்ப இருக்கிற இந்த engineering படிப்பு கொடுத்த மன அழுத்தம்,வீட்டோட நம்பிக்கையும் காப்பாத்த முடியாம ஏற்பட்ட கோபம் எல்லாம் சித்தார்த் அவ்வளவு இயல்பா வெளிப்படுத்தி இருக்கார்.

நம்ம இயல்புக்கு ஒத்த மனிதர்களையே வாழ்க்கை துணையா தேர்ந்து எடுத்துகிறது,மனசுக்கு பிடிச்சதை தொழிலா செய்யும் போது கிடைக்கும் நிறைவு இப்படி அணு அணுவா என்னையவே பார்க்க முடிஞ்சது. இடைவெளி வரைக்கும் ஒரு பயம் இருந்துகிட்டே இருந்தது,படம் ரொம்ப ரொம்ப மென்மையா மெதுவா போகுதுன்னு, வேண்டிக்கிட்டேன் அய்யா ஶ்ரீ கணேஷ் எப்படியாவது மீண்டு வந்துடுங்கன்னு. இடைவெளிக்கு அப்புறம் படம் நம்ம வீட்டுக்குள்ளேயே இருக்குற உணர்வை கொடுக்குது, அந்தரங்கமான சிரமங்களை,ஆண் , பெண் உறவை , பணம் வைச்சு இருக்கிற சொந்தக்காரங்க காட்டுற அதிகாரத்தை, அப்பா என்னைய மாதிரி ஆகிடாதடான்னு சொல்லும் போது வலிக்குது... எந்த பிசகும் சின்ன மன விலக்கம் கூட இந்த படத்தில் வரல இத்தனை நல்ல படத்தை எடுக்க இந்த ஆளும் அவங்க கூட்டாளிகளும் எவ்வளவு போராடி இருப்பாங்க அப்படின்னு நினைச்சா மலைப்பா இருக்கு.

நாம ஜெயிக்க வைக்க வேண்டிய படம் இது... நிச்சயம் எல்லோரும் தியேட்டர் போய் பாருங்க. யார் என்ன சொன்னாலும் நீங்க நேரில் படம் பார்த்தால் நம்ம அப்பா,அம்மா, மனைவி பிரிய தங்கை ,அண்ணன், தம்பி எல்லோரையும் பார்க்க முடியும்.. எனக்கு வீடு படம், தவமாய் தவமிருந்து படம் பார்த்த போது கிடைச்ச மன நிறைவு இதிலேயும் பார்க்க முடிஞ்சது" என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: மிரட்டலாக அட்டகாசமாக வெளியானது கண்ணப்பா படத்தின் மேக்கிங் வீடியோ..! இணையத்தில் வைரல்..!