• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜியால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..!! மனைவி இந்துவை பார்த்து பெருமைப்படும் கங்கை அமரன்..!

    திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜியிடம் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் மனைவி இந்து தான் என கங்கை அமரன் பாராட்டி இருக்கிறார்.
    Author By Bala Tue, 22 Sep 2026 11:25:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-gangai-amaran-emotional-speech-on-sons-premgi-change-tamilcinema

    தமிழ் சினிமாவில் எப்போதுமே தனக்கென ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன். இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்ற அடையாளங்களைத் தாண்டி, தனது நகைச்சுவை கலந்த நடிப்பு, இசை மற்றும் தனக்கே உரிய கலகலப்பான குணம் மூலம் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தவர் பிரேம்ஜி.

    குறிப்பாக, பல வருடங்களாக சினிமா வட்டாரத்தில் மிகவும் ஜாலியான நபராகவே அறியப்பட்டவர். நண்பர்களுடன் சுற்றுவது, பார்ட்டி, பப் என தனது வாழ்க்கையை மிகவும் கூலாக வாழ்ந்து வந்த பிரேம்ஜி, திருமணம் செய்து கொள்வாரா என்பதே ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக கேள்வியாக இருந்தது. ஒரு கட்டத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘பிரேம்ஜி எப்போதுமே சிங்கிள்தான்’ என்ற ஒரு பிம்பமே உருவாகிவிட்டது. ஆனால், அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றியது 2024-ம் ஆண்டு நடைபெற்ற அவரது திருமணம்.

    பிரேம்ஜி, இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமணத்தை பிரேம்ஜியின் சகோதரர் வெங்கட் பிரபு முன்னின்று நடத்தி வைத்தார். பல வருடங்களாக சினிமாவில் பேச்சுலர் வாழ்க்கையை அனுபவித்து வந்த பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட செய்தி அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்குப் பிறகு பிரேம்ஜியின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சென்னை புரமோஷனை தவிர்த்த கயாடு லோஹர்..!! ஹைதராபாத்தில் செம குத்தாட்டம்.. மஞ்சணத்தி தான் காரணமா..!

    குறிப்பாக, முன்பு எப்போதும் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பவராக பார்க்கப்பட்ட பிரேம்ஜி, தற்போது மனைவி மற்றும் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த மாற்றத்தை அவரது தந்தை கங்கை அமரனும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். பிரேம்ஜி திருமணத்திற்கு பிறகு எந்தவிதமான நைட் பார்ட்டிகளுக்கும் செல்வதில்லை என்றும், பெரும்பாலான நேரத்தை தனது மனைவியுடன் செலவிட்டு வருவதாகவும் கங்கை அமரன் கூறியுள்ளார். மேலும், தனது மகன் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறிவிட்டதாகவும், குடும்ப வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை பார்த்து தான் சந்தோஷப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    gangai-amaran-emotional-speech

    “பிரேம்ஜி முன்ன மாதிரி இல்லைப்பா... ரொம்ப மாறிட்டான்” என்ற கங்கை அமரனின் வார்த்தைகள், தனது மகனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஒரு தந்தையாக அவர் எந்த அளவுக்கு கவனித்து வருகிறார் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு பிரேம்ஜியின் வாழ்க்கை முறை குறித்து பல்வேறு விதமான கலகலப்பான பேச்சுகள் இருந்த நிலையில், தற்போது அவர் முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருவதாக கங்கை அமரன் கூறியிருக்கிறார். குறிப்பாக, முன்பு இருந்த சில பழக்கங்களை எல்லாம் விட்டுவிட்டு குடும்பஸ்தனாக மாறியிருப்பதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

    இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக தனது மருமகள் இந்துவையும் கங்கை அமரன் குறிப்பிட்டுள்ளார். இந்து, பிரேம்ஜியை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும், தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது தனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்வதே முக்கியம் என்ற வகையில் அவரது கருத்துகள் அமைந்துள்ளன. திருமணத்திற்குப் பிறகு பிரேம்ஜியின் சமூக வலைதள பக்கங்களிலும் இந்த மாற்றத்தை ரசிகர்கள் பார்க்க முடிகிறது.

    குறிப்பாக, மனைவி இந்து மற்றும் மாமியாருடன் இணைந்து பிரேம்ஜி வெளியிடும் ‘மாமிஸ் மசாலா’ எனும் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சினிமாவில் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், தற்போது பிரேம்ஜியை குடும்பத்துடன் இணைந்து ஜாலியாக நேரத்தை செலவிடும் நபராக பார்க்கத் தொடங்கியுள்ளனர். மனைவி, மாமியார் என குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் செய்யும் ரீல்ஸ் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவனம் பெறுகின்றன. இதுகுறித்தும் கங்கை அமரன் மிகவும் இயல்பாகவே பேசியுள்ளார். பிரேம்ஜி தற்போது மாமியார் மற்றும் மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் செய்வதை குறிப்பிட்டு, இது அவரது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் ஒரு பகுதிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், ஒரு பெற்றோராக இருந்தாலும் தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் கங்கை அமரன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பிரேம்ஜி எப்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம் என்றும், “ஏன் இப்படிப் பண்ற?” என்று கேட்கும் உரிமை தனக்கு இல்லை என்றும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ஒரு மகனின் வாழ்க்கையில் பெற்றோரின் அக்கறை இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை மற்றும் முடிவுகளை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது. இதற்கிடையே, பிரேம்ஜிக்கு குழந்தை பிறந்தபோது குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்தும் கங்கை அமரன் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    தனது பேத்திக்கு ஒரு பெயரை நினைத்து வைத்திருந்ததாகவும், ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு பெயர் வைப்பதில் அந்த குழந்தையின் பெற்றோருக்கும் ஒரு ஆசை, விருப்பம் இருக்கும் என்பதால், அதில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

    gangai-amaran-emotional-speech

    இதனைத் தொடர்ந்து, தனது மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோரின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணத்தையும் கங்கை அமரன் பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு பிறப்பதற்கு முன்பு தானும் தனது மனைவியும் வெங்கடாஜலபதியை வேண்டிக் கொண்டதாகவும், அந்த வேண்டுதலின் அடிப்படையிலேயே அவருக்கு ‘வெங்கட் பிரபு’ என்ற பெயர் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதேபோல், கணபதியை வேண்டிக் கொண்டு பிறந்தவர் பிரேம்ஜி என்றும், அதனால்தான் அவருக்கு அந்த பெயர் வைக்கப்பட்டதாகவும் கங்கை அமரன் கூறியுள்ளார். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது குழந்தை தொடர்பாக ஒரு தனிப்பட்ட விருப்பமும் வேண்டுதலும் இருக்கும் என்பதால், அந்த விஷயங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தந்தையாக தனது மகனின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ரசித்து வருவதாக கங்கை அமரனின் பேச்சு அமைந்துள்ளது.

    குறிப்பாக, பல ஆண்டுகளாக சினிமாவில் பேச்சுலர் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தப்பட்ட பிரேம்ஜி, தற்போது மனைவி மற்றும் குழந்தையுடன் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து தான் மிகவும் சந்தோஷப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரேம்ஜியின் திருமணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ரசிகர்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகவே இருக்கிறது. சினிமாவில் தனது நகைச்சுவை மற்றும் ஜாலியான குணத்தால் ரசிகர்களை மகிழ்வித்து வந்த பிரேம்ஜி, தற்போது குடும்ப வாழ்க்கையையும் அதே உற்சாகத்துடன் ரசித்து வருவது அவரது சமூக வலைதள பதிவுகளிலும் தெரிகிறது.

    குறிப்பாக, மனைவி இந்துவுடன் அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து செய்யும் ரீல்ஸ் ஆகியவை ரசிகர்களிடம் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. முன்பு பிரேம்ஜியை சினிமா நண்பர்களுடனும் பார்ட்டி சூழல்களுடனும் பார்த்த ரசிகர்கள், தற்போது அவரை குடும்பத்துடன் பார்க்கும் இந்த புதிய மாற்றத்தை ரசித்து வருகின்றனர். ஒரு மனிதரின் வாழ்க்கையில் திருமணம் என்பது பல்வேறு மாற்றங்களை கொண்டு வரக்கூடிய ஒரு முக்கியமான கட்டம். பிரேம்ஜியின் விஷயத்திலும் அந்த மாற்றம் வெளிப்படையாக தெரிகிறது என்பதே அவரது தந்தையின் பேச்சிலிருந்து தெரிய வருகிறது.

    அதிலும் குறிப்பாக, தனது மகன் தற்போது மனைவி மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ஒரு தந்தையாக பெருமிதம் கொள்வதாக கங்கை அமரன் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இப்படி சினிமாவில் நீண்ட காலமாக ஜாலியான பேச்சுலராக அறியப்பட்ட பிரேம்ஜி, தற்போது கணவன், அப்பா என்ற புதிய பொறுப்புகளுடன் குடும்ப வாழ்க்கையில் பிஸியாகி விட்டார். அவருடைய இந்த மாற்றத்தை அருகில் இருந்து பார்த்து வரும் கங்கை அமரனும், “இது எனக்கு ரொம்ப நல்லாதான் தோணுது” என்ற மனநிலையில் தனது மகனின் வாழ்க்கையை ரசித்து வருகிறார்.

    gangai-amaran-emotional-speech

    பிரேம்ஜியின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த புதிய அத்தியாயம் ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் ‘மாமிஸ் மசாலா’ மட்டுமல்லாமல், மனைவி மற்றும் குழந்தையுடன் பிரேம்ஜி பகிர்ந்து கொள்ளும் இன்னும் பல குடும்ப தருணங்களையும் சமூக வலைதளங்களில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்
    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share