அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்து நான்கு மாதம் கடந்த நிலையிலும், பிரச்சனைகளை தீர்வு காண்கின்ற காட்டிலும் பிரச்சினைகளை திசை திருப்புவதில் கைதேர்ந்தவர்களாக தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சர்ச்சையிலும் சர்ச்சையாக இருக்கிறதை பார்த்து மக்கள் வேதனையுடன் தவெகவின் தடுமாற்றத்தை பார்த்து விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும், நாள் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், படுகொலைகள், போதைபொருள் கடத்தல், லாக்கப் மரணங்கள் இதுபோன்று சட்ட ஒழுங்கு சீர்கேடு இந்த கொடுமைகளோடு தவெகவின் நிர்வாகிகள் ரீல்ஸ் சர்ச்சைக்கும், தமிழ்நாடு மக்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளார்கள்.
முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையின் மதகை திறக்க சென்றபோது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாட்டிற்காக ஆறுகோடி செலவழித்துள்ளனர். அணை கட்டும் செலவே 5 கோடி என செல்கிறார்கள். இது மிகப் பெரியஅதிர்ச்சியும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதா? - சிடிஆர் நிர்மல் குமார் மீது பாய்ந்த ஆர்.பி.உதயகுமார்...!
இந்தியாவிலே ஏற்கனவே செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்களான மதர்சன் குழும்பத்தோடு ஒப்பந்தம் செய்ய ஏன் அரசு பணத்தில் லண்டன் பயணம் செல்ல வேண்டும் இதற்கு முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை.
மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு தீர்வு காண்பதை விட பஞ்சாபில் 12மணி நேரம் மின்வெட்டு என அமைச்சர் நிர்மல் குமார் கூறியது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது .சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எந்த ஒரு கலந்துரையாடல் செய்யாமல், அரசாணை வெளியிட்டது அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதை இன்றைக்கு அரசு பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதுகுறித்து முதல்வர் எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் காட்டி வருகிறார்.
மேலும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக ஒரு சர்ச்சை வருகிறது, அது குறித்து தவெகவில் இதுவரை எந்தவிதமான பதிலும் கூறவில்லை.
நான்கு மாதங்களில் 40 ஆயிரம் கோடி கடனை பெற்று சர்ச்சையின் அரசாக தவெக அரசு தட்டு தடுமாறி இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண்கின்ற வகையில் தாராபுரம், மதுராந்தகத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் எடப்பாடியாரின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும், குறிப்பாக ஜனநாயகத்திற்கு உயிர் ஊட்டுகின்ற வகையிலும், ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற வகையிலும், ஜனநாயகத்தை மிக முக்கியமாக பாதுகாக்க கூடிய தேர்தலாக தாராபுரம், மதுராந்தகத்தில் நடைபெறுகிறது.
நாங்கள் துரோகத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், தவெகவில் நிற்கும் வேட்பாளர்கள் செய்த துரோகங்களுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். இடைத்தேர்தலில் விஜய் மாஸ் எடுபடாது, எடப்பாடியாருக்கு தான் மாஸ் என வாக்காளர்கள் தீர்ப்பளிக்க உள்ளார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: அதென்ன அவ்வளவு பெரிய தேச குற்றமா?... சி.எம்.விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய ஆர்.பி.உதயகுமார்...!