தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வடிவேலுவையே பின்னுக்கு தள்ளியவர் தான் சந்தானம். இனி ஹீரோக்களுடன் இணைந்து எந்தவித காமெடி கதாபாத்திரங்களிலும் நடிக்க போவதில்லை என்று முடிவு செய்த இவர், தற்பொழுது காமெடி ஹீரோவாக மாறி பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது ஆரம்ப வாழக்கை லொள்ளு சபாவில் தொடங்கியது.

இதனை அடுத்து அவரது நகைச்சுவை திறமைக்கு பலனாக எஸ்.டி.ஆரின் "காதல் அழிவதில்லை" என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். ஆனால் அப்படம் பெரிதும் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்றாலும், 2004 ஆம் ஆண்டு சிம்புவின் 'மன்மதன்' திரைப்படத்தில் நடித்து தனது காமெடி கதாபாத்திரத்திற்கு என தனி இடத்தை உருவாக்கினார். அதற்கு பின் பல படங்களில் காமெடியனாக நடித்து இன்று சம்பளத்திலும் ரசிகர்களிலும் லட்சங்களை தாண்டி கோடிகளில் இருக்கிறார்.
இதையும் படிங்க: நண்பேன்டா.. சிம்பு - சந்தானம் இணையும் STR 49 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

இவரை போல், நடிகர் ஆர்யாவும், விஷ்ணுவர்த்தன் இயக்கிய "அறிந்தும் அறியாமலும்" என்ற திரைப்படத்தில் பிரகாஷ் ராஜிக்கு மகனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படவிழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சிம்பு மற்றும் ஆர்யா என பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு பேசி சென்றனர். இவர்களை அடுத்து பேசிய சந்தானம் தனது நெருங்கிய நண்பனான ஆர்யாவை குறித்து பேசியுள்ளார். அதில் " சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வீடு வாங்கினேன். அதில் சிலபல வேலைகள் இருந்ததால் ஆட்களை வைத்து வீட்டில் சிறிய சிறிய அல்டெர்நேட் வேலைகளை செய்து கொண்டு இருந்தேன்.

அப்பொழுது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை ஆனால் போதும், எனது அம்மாவும் எனது மனைவியும் அந்த வீட்டிற்கு சென்று பூஜை செய்து விட்டு வருவது வழக்கம். அப்பொழுது ஒரு நாள் திங்கள் கிழமை போல் ஆர்யா எனக்கு போன் செய்து மச்சான் அடுத்த படத்தில் இருவரும் கமிட் ஆகியுள்ளோம். கதை நன்றாக உள்ளது என கூறி எங்கே இருக்கிறாய் என கேட்டார். நான் புது வீட்டின் முகவரியை கொடுக்க அங்கு வந்து வீட்டை பார்த்த ஆர்யா, மச்சா... என்னடா வீடு இது நல்லாவே இல்ல. எப்படி இதுல குடும்பத்தோட தங்குவ என சொன்னான்.

அவன் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என நான் நம்புவேன். ஆனாலும் அவரிடம் வீடு வாங்கிட்டேன் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என நான் சொன்னேன். ஆனால் ஆர்யா, நீ சும்மா இரு.. இன்னைக்கு சரின்னு சொல்லுவ அப்புறம் புலம்புவ என சொல்லி வீட்டை இடித்து புதியதாக கட்டலாம் என கூறி அவரது நண்பர்களை வரவழைத்து மூன்றே நாட்களில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி கட்டிடம் இருந்த சுவடே இல்லாமல் அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்று விட்டார்கள்.
பின் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு பூஜை செய்ய வந்த எனது அம்மாவும் மனைவியும் வீட்டை காணவில்லை என தெருத்தெருவாக சுற்றி அழைந்து என்னிடம் கேட்க, அதன் பிறகு தான் நான் ஆர்யா சொல்லி செய்ததை சொன்னேன். என் அம்மா உடனே ஷாக் ஆகி, ஏண்டா படத்தில் தான் இப்படி இருக்கீங்கன்னு பார்த்தா நிஜமாவே இப்படி தான் இருப்பிங்களா என கேட்டாங்க. அந்த அளவிற்கு எங்கள் நட்பு இன்றும் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சுந்தர் சி பெரிய தீர்க்கதரிசி தான்..! அவர் சொன்னது இப்போ பலிச்சிருக்கு.. சந்தானம் சொன்ன விஷயம்..!