தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அவர் தான் நடிகர் அஜித் குமார். பல நடிகர்கள் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் இவர் மட்டும் பைக் ரைடு செய்தார், வெளிநாடுகளை சுற்றி பார்த்தார், மாணவர்களுக்கு ஆசிரியராக மாறினார், கார் ரேஸில் வெற்றி பெற்றார் என இப்படிப்பட்ட செய்திகளிலேயே அதிகம் சிக்குவார். பெரிதாக எந்தவித விருது நிகழ்சிகளுக்கும் செல்வதில்லை, படம் வெற்றியடைந்தால் ஆட்டமும் இல்லை, அதிகமான பேச்சும் இல்லை ஆனால் இன்றும் ரசிகர்கள் மத்தில் "தல", "அல்டிமேட் ஸ்டார்", "காதல் மன்னன்" என்ற பெயர்களில் அவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார் நடிகர் அஜித்.

இப்படிப்பட்டவர், இதுவரைக்கும் தமிழில் மட்டுமே படங்களை நடித்து உள்ளார். ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிசார்ந்த ரசிகர்களுக்காக இவரது படம் டப்பிங்கில் இன்றுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வளர்ந்த நடிகர் அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு வெளியான "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர், "அமராவதி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்த அஜித் அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித் கண்டனம்..! மத்திய அரசுக்கு புதிய வேண்டுகோள்..!

இதனை அடுத்து, அஜித் குமாரின் நடிப்பில் வெளியான "ஆசை" திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அஜித்குமாரின் ப்ளாக் பஸ்டர் படமாக பார்த்தால் 2002-ம் ஆண்டு வெளியான "தீணா" திரைப்படம் தான். இதற்கு பின்பு தான் அஜித்துக்கு "தல" என்ற பெயரை ரசிகர்கள் அன்புடன் வைக்க ஆரம்பித்தனர்.

இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்பொழுது நடிகர் அஜித்தும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் பங்கு கொண்ட நடிகர் அஜித், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருதை பெற்றார். பின் அந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டு அதன் புகைபடங்களையும் வெளியிட்டார். இந்த நிலையில், தனது மனைவி ஷாலினி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் அஜித்.

நடிகர் அஜித் பேசுகையில், தனக்காக ஷாலினி பல தியாகங்கள் செய்து இருக்கிறார், என்னை பார்த்தால் வலிமையாக தெரியும் ஆனால் உண்மையில் அவர் தான் எனது வலிமையின் பில்லர். நான் எல்லா நேரமும் சரியான முடிவுகளை எடுப்பது இல்லை. ஆனாலும் என்னுடைய கடினமான நேரங்களில் எனக்கு பக்கபலமாக என்னுடன் இருந்து, என்னை எந்த இடத்திலும் தாழ்த்தாமல் குறைவாக பேசாமல் உங்களால் முடியும் என உற்சாகப்படுத்துவார். இதுவரை நான் சாதித்த அனைத்திற்கும் ஹாலினிக்கு தான் முழு க்ரிட்டிட்டையும் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: CSK ஆட்டத்தை பார்க்க வந்த AK... கூடவே இருந்த SK; உற்சாகத்தில் ரசிகர்கள்!!