ஊர்வசி என்றால் பாக்யராஜுடன் அடிக்கடி தோன்றும் நடிகை ஊர்வசி அல்ல. இவர் நடித்த ஒரே தமிழ் படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்த ஊர்வசி. இவர் நடித்த படங்களில் "டாக்கு மகாராஜ்" படத்தில் நடித்ததற்காக பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இருப்பினும் இவரை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள காரணமானவர் ஒருவர் உண்டு. லெஜெண்ட் சரவணனை அனைவரும் பார்த்து இருக்க முடியும். சரவணா ஸ்டார் பாத்திர கடை, சரவணா ஸ்டார் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ், சரவணா ஸ்டார் தங்க மாளிகை என பல கடைகளுக்கு சொந்தக்காரர் தான் லெஜெண்ட் சரவணன். இவர் தினமும் கடைக்கு தனி ரக விலையுயர்ந்த காரில் செல்பவர்.

இப்படி இருக்க, எப்படி தனியார் நகை கடை உரிமையாளர் ஒருவர் 'நாங்க இருக்கோம்' எனவும் 'நம்பி வாங்க அள்ளிட்டு போங்க' என தனது நகை கடைக்கு விளம்பரம் செய்தாரோ.. காலம் காலமாக வசந்தன்..கோ ஓனரும் எப்படி தன் கடைக்கு விளம்பரம் செய்தாரோ அதே போல் லெஜெண்ட் சரவணன் தனது கடைக்கு தானே நடித்து விளம்பரம் செய்து ஃபேமஸ் ஆனார்.
இதையும் படிங்க: ஷுட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நயன்தாரா... இயக்குநரையே கடுப்பாக்கிய நயனின் செயல்..!

அதுமட்டுமல்லாமல், தனது கதைக்கான முதல் விளம்பரங்களை ஒரு ஹீரோயிகளுடன் நடிக்க ஆரம்பித்தவர், பின்பு பல நடிகைகளுடன் நடித்து தனது கடையை மட்டும் அல்லாமல், தன்னையும் பிரபல படுத்திக்கொண்டார். இப்படியே விளம்பரம் மட்டுமே நடிக்கிறீர்களே எப்பொழுது ஹீரோ ஆவீர்கள் என ரசிகர்கள் "சும்மா இருந்தவரை சொரிந்து விடுவது போல்" அவரை உசுப்பேத்த, பல கோடி ரூபாய் செலவு செய்து சைன்டிஸ்ட்டாக அவதாரம் எடுத்து படத்தில் நடித்தார். அப்படத்தில், லெஜெண்ட் சரவணன் எப்படி தான் நடித்து இருக்கிறார் என்பதை பார்க்க ஒருகூட்டம் தியேட்டருக்கு சென்று படத்தை ஹிட் ஆக்கியது. இதனை தொடர்ந்து லெஜெண்ட் தனது அடுத்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், லெஜெண்ட் சரவணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழி திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டவர் தான் ஊர்வசி ரவ்துலா. இவர் இந்தியாவில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை தற்பொழுது செய்துள்ளார். என்னவெனில், ஊர்வசி ரவ்துலா தனக்கென புது "ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை" வாங்கி, இந்திய நடிகைகளில் முதலில் "ரோல்ஸ் ராய்ஸ் காரை" வாங்கிய பெருமையை அடைந்துள்ளார். இந்த அல்ட்ரா சொகுசு காருக்காக 12 கோடி ரூபாய் செலவு செய்து வாங்கி இருக்கிறார் ஊர்வசி. காரை வாங்கியது மட்டுமின்றி அதிலிருந்து ஸ்டைலாக இறங்கி அசத்தி இருக்கிறார்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனை தங்கள் ஆடம்பர சேகரிப்பின் ஒரு பகுதியாக மாற்றிய சில குறிப்பிடத்தக்க நபர்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, கல்லினனின் பல மாடல்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற ஷாருக்கான், தனது கார் சேகரிப்பில் "ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜையும்" சேகரித்து வைத்துள்ளார். இவர்களை தொடர்ந்து "வெள்ளி-சாம்பல்" நிற மாடலை நடிகர் விவேக் ஓபராயும், இக்காரின் எஸ்.யூ.வி ரக காரை அஜய் தேவ்கனும், சமீபத்தில் புஷ்பாவில் நடித்ததற்காகப் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுன் கூட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன பிரமாதம் இதனை மட்டும் எங்கள் நயன்தாரா பார்த்தர்களானால் அடுத்த நாளே 30 கோடிக்கு காரை இறங்குவார் என பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழில் அறிமுகமாகும் தசரா பட ஹீரோ... உடலை வருத்தி ஷூட்டிங்!!