தெலுங்கு சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் பிரபலம் பெற்றவர் நடிகை கீர்த்தி பட். 'கார்த்திகை தீபம்' மற்றும் 'மனசிச்சிச்சுடு' போன்ற வெற்றிச் சீரியல்களில் நடித்து, தனது இனிமையான நடிப்பால் வீட்டுக்குள் எல்லோருக்கும் பரிச்சயமான முகமாக மாறினார். பின்னர் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6-இல் பங்கேற்று, ரசிகர்களின் பரிபூரண ஆதரவுடன் முதல் 3 இடங்களில் இடம் பெற்றார்.
எதிலும் விலகாத நேர்மையான பேச்சுகள், அழகான ஆனால் சாதாரண உடைகளில் வெளிப்படும் சுத்தமான ஸ்டைல், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் எதிர்பார்க்கப்படும் சினிமா போலி தனங்களில் கலந்து கொள்ளாத அவர், இன்று தனது வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார். அதிலும், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தொலைக்காட்சி வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கான உண்மையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார், அது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும், பாடல் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், நகைச்சுவை காமெடி ஷோக்கள், பிக் பாஸ் குறித்த டிஸ்கஷன் நிகழ்ச்சிகள் என இவை அனைத்திலும் பங்கேற்கும் பல பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்களில் கீர்த்தி பட் மட்டும் காணப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே பல சந்தேகங்களை உருவாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனலிலும் கூட, அவர் எங்கு காணப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்தது. ஒரு தனியார் இணைய ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், நடிகை கீர்த்தி பட் மிக நேர்மையாகவும், உருக்கமாகவும் தனது நிலையை எடுத்துரைத்தார். அதில், “தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது அடிப்படை கோட்பாடாக இருக்கிறது. நான் பாரம்பரிய உடைகள், மிதமான மேக்கப், எளிய தோற்றத்துடன் இருக்க விரும்புகிறேன். ஆனால், அவர்கள் சொல்வது போல் முழங்கால் வரை உடைகள், குத்தும் மேக்கப், ஸ்டைலிஷ் நடத்தை என இவையில்லாமல் நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு பொருத்தமில்லை என்று கூறுகிறார்கள்.

என்னால் அப்படிச் செய்ய முடியாது. அது என் நம்பிக்கையோடோ, என் குடும்பத்தின் பார்வையோடோ ஒத்துப்போவதில்லை. அதனால்தான், எனக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை” என்றார். பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் பலருக்குப் பெரிய படத்திற்கு ஏற்ற படிக்கல்களாகவே அமைகின்றன. ஆனால், கீர்த்தி பட் கண்டு பிடித்த உண்மையே வேறு. அதை குறித்து அவர் பேசுகையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி என் வாழ்க்கையில் எந்த பயனும் அளிக்கவில்லை. அது என் வாழ்க்கையை மாற்றவில்லை. நான் பிக்பாஸ் வீட்டில் என் இயல்பாக இருந்தேன். எதுவும் நடிப்பில்லாமல். ஆனால் அந்த இயல்பு, வெளியுலகத்திற்கு வேண்டிய 'டிராமா' இல்லாததால், அது பலருக்கு சரிப்பட்டு வரவில்லை. பிக்பாஸ் முடிந்த பிறகு வாய்ப்புகள் வரவில்லை. வந்த வாய்ப்புகளும் என் உடலை அதிகமாக காட்சிப்படுத்த வேண்டிய வகையில் இருந்தன. அதை நான் மறுத்துவிட்டேன்” என்றார்.
இதையும் படிங்க: ஜெயிப்பதை இப்படியும் சொல்லலாம் போல..! வெற்றிக்கு புது டெபனேஷன் கொடுத்த நடிகை ரகுல் பிரீத் சிங்..!
அதிலும் குறிப்பாக “முழங்கால் வரை உடை அணிபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகிறார்கள்” என்பது, ஒரு பெண் நடிகைக்கு சமூகத்தில் நிலவும் அழகு குறியீட்டின் மீது கட்டாயம் ஏற்படுத்தும் மதிப்பீடு என்பதை மிக தெளிவாக வெளிக்கொணர்கிறது. அவர் தெரிவிக்க வருவது என்னவெனில் பெண்கள் உடல் பிரதிபலிப்பை மையமாக்கும் கலாச்சாரம் அதிகரித்து விட்டது, இயல்பான அழகு, சுத்தமான நடிப்பு போன்றவை முக்கியமல்ல என தோன்றும், அத்துடன் பாரம்பரிய பெண்கள் தொலைக்காட்சியில் அவுட்டேட்டடு எனக் கருதப்படுகிறார்கள்.. ஆகவே நடிகை கீர்த்தி பட் தனது வாழ்க்கை முறையையும், நம்பிக்கையையும் விட்டுவைக்காமல், சமூகத்தில் நிலவுகின்ற பெண்களுக்கு எதிரான அழகு என வாய்ப்பு சமிக்ஞைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். அவர் பேச்சுகள், சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான நடிப்பு வாய்ப்புகளும், தகுதியை விட தோற்றத்தை முன்னிலைப்படுத்தும் ஊடக மனப்பாங்கும், தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படவேண்டிய முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன.

"நீங்கள் யார் என்பதை விட, நீங்கள் எப்படி தெரியுகிறீர்கள் என்பதுதான் முக்கியமா?", "திறமைக்கும் மரியாதைக்கும் இடம் இருக்கிறதா?" இந்த கேள்விகள் இன்று கீர்த்தி பட் மூலம் மீண்டும் ஒருமுறை கேட்கப்படுகின்றன.
இதையும் படிங்க: அப்துல் கலாம் ஃபையோ பிக் படத்தில் நடிகர் தனுஷ்..! அவரை தவிர யாரும் சூட்டாக மாட்டாங்க - இயக்குனர் ஓம் ராவத் திட்டவட்டம்..!