நவீன காலகட்டத்தில் அனைவரும் சமூகத்திற்காவும் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் அதிக படியான சுமைகளை தங்கள் மீது ஏற்றிக்கொண்டு ஒருநாள் கூட லீவு எடுக்காமல் வேலைக்கு ஒடிக்கொண்டு இருக்கின்றனர். இப்படி வாழ்க்கை முழுவதும் எந்த சந்தோஷங்களையும் காணாமல் ஓடும் மக்களை ஸ்ட்ரெஸில் இருந்து வெளியே கொண்டு வந்து மீண்டும் மகிழ்ச்சியாக வைக்க பல வழிகளை அரசும் மேற்கொண்டு தான் வருகிறது. அதில் ஒன்று தான் "ஹாப்பி ஸ்ட்ரீட்". வார இறுதியில் தெருக்களில் மக்கள் ஒன்றாக இணைந்து ஆடி பாடி மகிழ்ச்சியுடன் இருபத்தற்க்காக ஏற்படுத்தப்பட்டது. அதிலும் பல மக்கள் வந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படி இருக்க, தற்பொழுது விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜ, ஹிப் ஹாப் ஆதி, அனிருத், ஆகியோர் தங்களது பாடல்களை கான்சர்ட்டாக மக்கள் மத்தியில் செய்து வருமானம் ஈட்டுவதுடன், மன அழுத்தத்தில் உள்ள மக்களின் மன நிலைமையையும் மாற்றி வருகின்றனர். இப்படி இவர்கள் அனைவரும் இன்று கான்சர்ட் நடத்தினாலும் அன்றே ஊர் அறிய நாடறிய பல மேடைகளில் பலநூறு கணக்கான இசை மேதாவிகளை வைத்து பாடல்களை பாட வைத்து மக்களை மகிழ்வித்தவர் இளையராஜா.
இதையும் படிங்க: எனக்கு இசை தெரியாது ஆனால் இசைக்கு என்னை தெரியும்..! இளையராஜாவின் மாஸ் ஸ்பீச்..!

இப்படி பட்ட இளையராஜா, "அன்னக்கிளி" என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதேசமயம், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான "பத்ம விபூஷண்" விருது 2018ல் இவருக்கு வழங்கப்பட்டது.

இதுவரை இளையராஜா இதுவரை காயத்திரி, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், சட்டம் என் கையில், அவள் ஒரு பச்சை குழந்தை, முள்ளும் மலரும், பைரவி, உதிரிப்பூக்கள், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், குரு, நிழல்கள், காளி, நான் போட்ட சவால், நெஞ்சத்தைக் கிள்ளாதே, எல்லாம் உன் கைராசி, மூடு பனி, ஜானி, முரட்டு காளை, மீண்டும் கோகிலா, ராஜ பார்வை, கர்ஜனை, கழுகு, நெற்றிக்கண், அலைகள் ஓய்வதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, தனிகாட்டு ராஜா, மூன்றாம் பிறை, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பயணங்கள் முடிவதில்லை, சகலகலா வல்லவன், பாயும் புலி, அடுத்த வாரிசு, தங்கமகன், நான் பாடும் பாடல், கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், தம்பிக்கு எந்த ஊரு, நான் மகான் அல்ல, வைதேகி காத்திருந்தாள், நல்லவனுக்கு நல்லவன், நூறாவது நாள், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், இதய கோயில் இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

இந்த சூழலில், கரூரில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையராவின் குரலை கேட்க ரூ.500 முதல் ரூ.50,000 வரை கட்டணம் வசூலிப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க, பல்லாயிர கணக்கான மக்கள் இளையராஜாவின் குரலை கேட்க, நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி விட்டு சென்றுள்ளனர். உள்ளே சென்ற பின் பாடல்களும் இசையிலும் நன்றாக தான் உள்ளது ஆனால் உள்ளே அமர முறையான வசதிகள் செய்யப்படவில்லை. காவல்துறையினர் தங்களை நாயை விட கேவலமாக நடத்தியதாக ஆவேசமாக கூறி, கட்டண ரசீதை கிழித்து விட்டு சென்றனர்.

இதில் குறிப்பாக பேசிய ஒரு பெண், ரூ.3000 செலுத்தி பிளாட்டினம் டிக்கெட் வாங்கி இங்கு வந்தோம், ஆனால் எங்களுக்கான மரியாதையும் இல்லை அந்த அளவிற்கு சரியான பாடல்களும் இல்லை குறிப்பாக உட்கார சேரும் இல்லை அதனால் நிண்ட நேரம் எங்களால் நின்று கொண்டு கச்சேரியை பார்க்க முடியாததால் கிளம்பி விட்டோம் என தெரிவித்தார். மேலும் குடிக்க தண்ணீர் இல்லை இப்படியெல்லாம் செய்தால் என்ன செய்வது. மனஅழுத்தம் போக்கலாம் என இங்கு வந்தால் இளையராஜா கச்சேரி எங்களுக்கு மீண்டும் மன அழுத்தத்தையே கொடுக்கிறது என வேதனைப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: யாருக்கும் தெரியாத ஷாருக்கானின் குடும்ப ரகசியம்..! அவருக்குள் இப்படி ஒரு வலியா.. புலம்பும் ரசிகர்கள்..!