நடிகை பாவனி ரெட்டி என்பதை விட பிக்பாஸ் பாவனி என்றால் தெரியாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்த இவர், திடீரென சீரியலுக்கு பிரேக் போட்டுவிட்டு பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டார். அப்பொழுது வரை பாவனியை பற்றி தெரியாதவர்கள் அவரை தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் அவர், நான் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டேன், ஆனால் திடீரென ஒரு நாள் என் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள் என கண்ணீர் மல்க பேச, அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதனையடுத்து இந்நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தவர் அமீர். அவர் வந்த உடனே பாவனியை பாதுகாக்க ஆரம்பித்து பல பேச்சுக்களையும் வாங்கினார், ஆனாலும் தான் பாவனியை காதலிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: தன்னை விட 4 வயது இளையவரான அமீரை காதலித்து கரம்பிடித்த பாவனி ரெட்டி!

ஆனால், பாவனியோ "நான் உன்னை விட பெரியவள் என கூறி காதலை மறுத்தார். ஆனால் எப்படியோ அவருடைய காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், காதலர் தினத்தன்று நடிகை பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு coming soon என பதிவிட்டு இருந்தார்.

இதனை அடுத்து ஏப்ரல் 20-ம் தேதி தொகுப்பாளினி பிரியங்காவின் தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் ரிசார்ட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியே வர, கணவன் மனைவியாக இருவரும் பல இடங்களுக்கு சென்று தங்களது ஹனிமூனை கழித்து வருகின்றனர் என நெட்டிசன்கள் பேசி வர, "மக்கள் நாங்கள் ஹனிமூன் போயிருக்கிறோம் என நெனச்சிட்டு இருக்காங்க. ஆனால் நாங்கள்" என குறிப்பிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் இருவரும் வீடியோ காலில் பேசுவதை போல் இருக்கிறது.

இதனால் இருவரும் ஹனிமூனில் ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக வேலை நிமித்தமாக பிரிந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஹீரோக்களுக்காக நிக்காதீங்க.. ராணுவ வீரர்களுக்காக நில்லுங்க.. கார்த்திக் சுப்பராஜ் பேச்சு..!