நடிகை சிம்ரன் சமீபத்தில் "இந்தியா- பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போரால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் எல்லாம் சரியாக போய் கொண்டு உள்ளது. போர் பதற்றம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று நான் கடவுளை பிராத்திக்கிறேன். ஆனால் கண்டிப்பாக போரின் முடிவில் மனிதநேயம் தான் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன்". என கூறியதை போல் இன்று மனிதநேயம் ஜெயிக்க வேண்டும் என இந்திய நாட்டு மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த ஆபரேஷனில் ஒரு பாகிஸ்தான் மக்களையும் இந்திய ராணுவம் சுடவில்லை. எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவும் இல்லை. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பழிவாங்க மூன்று நாட்களாக தனது ட்ரோன்களை அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பிடி கொடுக்காமல் இந்திய ராணுவமும் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எல்லைல இடத்துக்கு சண்டை.. சினிமால "ஆப்ரேஷன் சிந்தூர்" பெயருக்கு சண்ட.. உருப்படுமா..!

இப்படி இருக்க, இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் தனது ட்ரோன்களை வைத்து காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து தனது தாக்குதலை நடத்தியது. இதனை சுதாரித்த இந்திய ராணுவம் தனது வான்வழி தாக்குதலால் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த முரளி நாயக்கின் தியாகம் தற்பொழுது அனைத்து இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் மக்களை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவமும் அரசாங்கமும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

பாகிஸ்தானால் நம்மை தொடமுடியாது என்னும் அளவிற்கு பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ள ராணுவம், மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முகாம்களை அமைத்து வருகிறது. மேலும் மக்கள் பொது இடங்களில் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்சிகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ரெட்ரோ படத்திற்கான வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்பொழுது, "நாம் இங்கு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் இதே வேளையில் நமக்காக எல்லையில் நமது ராணுவ வீரர்கள் தீவிரமாக பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வருகின்றனர். நம்மை பாதுகாக்க, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் நம்மை காக்க சண்டையிட்டு வரும் முப்படை ராணுவ வீரர்களுடன் நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!