காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.

இதனை பார்த்த நடிகை ஆண்ட்ரியா அப்பொழுது தனது சமூக வலைதள பக்கத்தில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்து போனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது. நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும்." என கூறி இருந்தார்.
இதையும் படிங்க: இந்தியா பாகிஸ்தான் போரால் எல்லாம் போச்சு..! அறிக்கை வெளியிட்டு கதறிய பாடகி..!

இதனை தொடர்ந்து, அடுத்த நாள் நடிகை ஆண்ட்ரியா, துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் ஏற்கனவே அவர் சுற்றுலா சென்று எடுத்த புகைப்படங்களை நினைவு கூர்ந்து அவரது இன்ஸடாவில் "அங்கு நானும் சுற்றுலா சென்ற பயணிதான். சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சென்று வரும் ஒரு சுற்றுலா பகுதியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்த, எப்படி தான் அவர்களுக்கு மனம் வந்ததோ என எனக்கு தெரியவில்லை. இந்த தகவல் எனது மனதை சுக்குநூறாய் உடைத்து விட்டது" என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி இருக்க, "ஆப்ரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானி அனைத்து தீவிரவாத அமைப்புகளை இந்தியா அழித்து விட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் எப்படியாவது இந்தியாவை பழி தீர்க்க தனது ட்ரோன்களை இந்தியாவின் எல்லை பகுதிகளில் அனுப்பி வருவதால் இந்திய ராணுவம் விழிப்புடன் இருந்து வருகிறது. மேலும், மூன்றாவது நாளாக இன்று நள்ளிரவில் மீண்டும் பாகிஸ்தான் தனது ட்ரோன்களை வைத்து காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து தனது தாக்குதலை நடத்தியது. இதனை சுதாரித்த இந்திய ராணுவம் தனது வான்வழி தாக்குதலால் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த முரளி நாயக்கின் தியாகம் தற்பொழுது அனைத்து இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இதுவரை வருத்தம் தெரிவித்து வந்த ஆண்ட்ரியா தற்பொழுது நடப்பவைகளை கண்டு ஆவேசமாகி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்விஷ் எழுதிய கவிதையை பதிவிட்டுள்ளார். அதில், “போர் முடிவுக்கு வரும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். அந்த மூதாட்டி தனது இறந்து போன மகனுக்காகக் காத்திருப்பாள். அந்தப் பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள். அந்தக் குழந்தைகள் தங்கள் ஹீரோ தந்தைக்காகக் காத்திருப்பார்கள். நமது தாயகத்தை யார் விற்றார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விலையை யார் கொடுத்தார்கள் என்பதை நான் கண்டேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட வாய்ப்பு வேணும்னா கிளாமர் லுக்ல மாறனுமாமே.. ஸ்ருஷ்டி டாங்கே 'நச்' கிளிக்..!