நம் நாட்டில் தடை செய்யப்பட்ட டிக் டாக் ஆனது இன்னும் பல நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. டிக் டாக் மற்றும் ரீல்ஸ் மோகத்தில் இன்று உலகமே மூழ்கி இருக்கும் வேலையில், காலையிலிருந்து மாலை வரை வேலை செய்யும் ஒவ்வொரு மனிதனும் வீட்டிற்கு சென்ற பின்பு தூங்கும் வரை செல்போனில் ரீல்ஸ்களை மட்டுமே பார்த்து வருவது வழக்கம். அதுமட்டுமல்லாது மிகப்பெரிய பிரபலங்கள் முதல் ரீல்ஸ் பிரபலங்கள் வரை யார் சமூக வலைத்தளங்களில் நேரலையில் வந்தாலும் அதனைப் பின்தொடரும் கூட்டமும் இங்கு உள்ளது.

அந்த வகையில் பார்த்தால் நேரலையில் மெக்சிகோவை சேர்ந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. மெக்சிகோவை சேர்ந்த 23 வயதுடைய வலேரியா மார்க்வெஸ், தனது tiktok சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளவர். அடிக்கடி தனது டிக் டாக் பக்கத்தில் அழகு குறிப்புகள் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றி வருவது தான் இவரது வழக்கமாக இருந்து உள்ளது. மேலும் அங்குள்ள பத்திரிகைகளிலும் இவர் முக்கியமான நபர் எனக் கூறப்படுகிறது. இப்படி இருக்க, ஜாலிஸ்கோவில் என்ற இடத்தில் உள்ள குறிப்பிட்ட அழகு நிலையத்தில் அழகு சாதன பொருட்களை குறித்து பேசும் வகையில் தனது டிக் டாக் சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் வந்து உள்ளார் வலேரியா.
இதையும் படிங்க: Anna Serial: அண்ணனை அம்மாவாக நினைக்கும் தங்கைகள் - பஞ்சாயத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்!

அவர் நேரலையில் வந்தவுடன் அவரை பின்தொடரும் சப்ஸ்க்ரைபர்கள் அவருடைய வீடியோவை கண்டு கொண்டிருந்த வேளையில், அடையாளம் தெரியாத நபர் இருவர் அவர் இருக்கும் கடைக்கு உள்ளே வந்திருக்கிறார்கள். அவர்களை பார்த்தவுடன் வலேரியாவின் முகம் சற்று மாறி, 'அவர்கள் வருகிறார்கள்' என கூறி வீடியோவை மியூட் செய்துள்ளார். அடுத்த கனமே அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே முதலில் அவருடைய வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், பின்பு அவருடைய தலையில் இரண்டு முறை சுட்டு உள்ளனர். இதில் நேரலையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார் வலேரியா. இதனைப் பார்த்த சப்ஸ்கிரைபர்ஸ் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருக்க, அந்த வீடியோவை ஒரு பெண் ஆப் செய்து இருந்தார்.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கேமராவில் பதிவான காட்சிகளில் இரண்டு நபர்கள் பைக்கில் வருவதும் அதில் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சென்று வலேரியாவை சுட்டுக்கொன்று விட்டு மீண்டும் பைக்கில் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் மெக்சிகோ போலீசார் குற்றவாளிகளை துரிதமாக பிடித்து கொலைக்கான காரணத்தை விரைவில் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Karthigai Deepam: சிவனாண்டிக்கு தெரியவந்த உண்மை! சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?