அதாவது வைஜெந்தி, வெங்கடேஷிடம் ரத்னாவை கொண்டு விட்டு அந்த பழியை அறிவழகன் மீது போடா கூறிய நிலையில், இன்று... இசக்கி இன்னைக்கு அன்னையர் தினம் என்று சொல்லி பாக்கியத்துக்கு வாழ்த்து சொல்ல பாக்கியம் பரணிக்கு போன் செய்து வாண்டடாக வாழ்த்து சொல்ல சொல்கிறாள்.
பரணி அம்மா நான் தான் போன் பண்ணி உனக்கு வாழ்த்து சொல்லணும், நீயா போனை போட்டு வாழ்த்தை கேட்டு வாங்க கூடாது என்று கலாய்த்து விட்டு வாழ்த்து சொல்கிறாள்.

இதையடுத்து பரணி இன்னைக்கு அன்னையர் தினம். உங்க அத்தைக்கு ஏதாவது செய்யலாமா என்று கேட்க தங்கைகள் அண்ணன் தான் எங்களுக்கு அம்மா மாதிரி என்று சொல்கின்றனர். இதனால் பரணி அப்போ சண்முகத்தை வைத்து எதாவது செய்யலாம் என்று திட்டம் போடுகின்றனர்.
இதையும் படிங்க: Anna Serial: ரத்னாவை கொலை செய்ய போடும் திட்டம்! அறிவழகனுக்கு எதிராக நடக்கும் சதி?
எல்லாரும் சேர்ந்து கேக் வாங்கி பஞ்சாயத்தில் வைத்து சண்முகத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர், இசக்கியையும் இந்த கொண்டாட்டத்திற்கு வர வைக்கின்றனர். சண்முகம் தங்கைகள் கொடுத்த சர்ப்ரைஸால் எமோஷனலாகி நிற்கிறான்.

தங்கைகள் ஒவ்வொருவரும் சண்முகத்தை பற்றி பெருமையாக பேசுகின்றனர், இறுதியாக இசக்கி அண்ணனை பற்றி பேச செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: அமெரிக்கா கிளம்பிய பரணி! காதலை சொல்வானா ஷண்முகம்? - அண்ணா சீரியல் அப்டேட்!