இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் மாமன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து படத்தின் மீது எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உண்டாக்கியுள்ளது. இந்த சூழலில் அவ்வப்போது இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், மற்றும் பாடல் ஆகியவை வெளியாகி மக்களை மகிழ்வித்து வருகிறது.

அக்கா தம்பியின் பாசத்தை முதன்மையாக கொண்டுள்ள இப்படம், தனது அக்காவுக்கு பிறக்க போகும் குழைந்தைக்கும் சூரிக்கும் உள்ள பந்தத்தை வெளிப்படுத்தும் படமாக உள்ளது. இப்படி இருக்கையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது இந்த மாமன் படம். இப்படி இருக்கையில் இப்படத்திற்கான ஃப்ரமோஷன் நிகழ்ச்சி அதிக இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படம் சந்தானம் படத்துடன் வருகிற மே -16ம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் வெளியாகும் 3 காமெடி ஹீரோக்களின் திரைப்படம்..! மே16ம் தேதிக்காக ஆவலுடன் ரசிகர்கள்..!

இந்த சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 'நிப்ட் டீ கல்லூரியில்' "மாமன்" திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகனான சூரியும், கதாநாயகியான ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டனர். அப்பொழுது அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் உறைந்து போன சூரி மற்றும் ஐஸ்வர்யா இருவரும், மாணவர்களின் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து பேசிய நடிகர் சூரி, "நான் எட்டாவது படிக்கும் பொழுது எனது படிப்பை விட்டுட்டு திருப்பூருக்கு வேலைக்காக வந்தேன். அப்பொழுது எனக்கு 14 வயது திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தேன். நிறைய வருமானம் எல்லாம் கிடையாது ஒரு தேங்காய் பண்ணுக்காக தெருத்தெருவாக சுற்றுவேன். அயராது உழைப்பேன். ஆனால் இன்று அதே திருப்பூரில் எனக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்து கௌரவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மேலும், தொழிலாளர்களால் உயர்ந்த ஊர் தான் இந்த திருப்பூர். இங்கு தொழிலாளியாக இருந்த பல பேர் இன்று முதலாளியாக அமர்ந்து உள்ளனர்.

உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் திருப்பூர் ஆடைகளையே மக்கள் விரும்பு உடுத்தி வருகின்றனர். அதுதான் நமக்கு பெருமையும் கூட. அதேபோல் என்னையும் வளர்த்தது இந்த திருப்பூர் தான். இங்கு தான் உழைத்தேன். தொழிலை கற்றுக்கொண்டேன். அனைத்து இடங்களுக்கும் சென்றேன். இன்று ஏதோ எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை. கடின உழைப்பு, அவமானங்கள் அனைத்தையும் கடந்து வந்துதான் இங்கு நிற்கிறேன். ஆனபடியால் எனக்கு வாழ வழி செய்த திருப்பூருக்கு பெருமை சேர்க்கும் விதமாக எனது படத்தின் ப்ரிரிலீஸ் இங்கு செய்யப்படுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது". என பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகை ஐஸ்வர்யா, "நடிகர் சூரியுடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஏனெனில் அவர் மிகவும் நேர்மையான மனிதர். அவர் செய்கின்ற எல்லா விஷயத்திலும் ஒரு நல்லது இருக்கிறது. இப்படி இருக்க, அவர் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு, மரியாதை கலந்துஇருக்கிறது. அதனால் அவருடன் நடிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இதுதான் பெண்கள் சக்தி.. இன்றைய தீர்ப்பு நாளைய தலைமுறைக்கு பாடம்..! நடிகை கஸ்தூரி நெகிழ்ச்சி பதிவு..!