தமிழ்நாட்டையே உலுக்கிய கூட்டு பாலியல் வழக்கு என பார்த்தால் அது தான் "பொள்ளாச்சி வழக்கு". 2019ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். பின்பு மார்ச் மாதம் கடைசியில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசமானது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள விடியோக்களை வைத்து மின்னணு ஆதாரங்கள் தயார் செய்யப்பட்டன. பின்பு இவர்களால் பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், அருளானந்தம், ஹெரன்பால், பாபு, அருண்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவர, அனைவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இதுதான் டா தீர்ப்பு.. பொள்ளாச்சி வழக்கு ஜெயிச்சாச்சி.. விஜய் தவெக தலைவராக பதிவிட்டுள்ள பதிவு வைரல்..!

இதனை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 போரையும் இன்று அதிகாலை சேலம் சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் காவல் துறையினர். பின்னர் இன்று மதியம் 12 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஒரே பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை தருவது என பல முக்கிய குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 9 பேரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அதில், குற்றவாளிகளான 9 பேரும் இளம் வயதினர். மேலும், திருமணமாகாதவர்கள்.. அவர்களுடைய எதிர்காலத்தையும், வயதான அவர்களது பெற்றோர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி நந்தினி தேவி அதனை மறுத்து,

முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள், மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள், நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள், ஐந்தாம் குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள், எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "பொள்ளாச்சி பாலியல் கயவர்கள் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை ! பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு. பாதிக்கப்பட்ட பெண்கள் மன உறுதியுடன் பின் வாங்காமல் சாட்சி பிறழாமல் போராடினார்கள். அவர்களால் இனி வரும் தலைமுறைக்கு புதிய எதிர்காலம்!" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி கேஸை முடிச்சிட்டீங்க.. அண்ணா பல்கலை. கேஸை விட்டுடாதீங்க..! கருத்தை பதிவு செய்த விஜே சித்து..!