டிடி நெக்ஸ்ட் லெவல் - கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த நிலையில், சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

மாமன் - இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் மாமன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து படத்தின் மீது எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உண்டாக்கியுள்ளது. இந்த சூழலில் அவ்வப்போது இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், மற்றும் பாடல் ஆகியவை வெளியாகி மக்களை மகிழ்வித்து வருகிறது. அக்கா தம்பியின் பாசத்தை முதன்மையாக கொண்டுள்ள இப்படம், தனது அக்காவுக்கு பிறக்க போகும் குழைந்தைக்கும் சூரிக்கும் உள்ள பந்தத்தை வெளிப்படுத்தும் படமாக உள்ளது. இப்படி இருக்கையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது இந்த மாமன் படம். இப்படி இருக்கையில் இப்படத்திற்கான ஃப்ரமோஷன் நிகழ்ச்சி அதிக இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படம் சந்தானம் படத்துடன் வருகிற மே -16ம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க: ரிலீசானது சந்தானத்தின் DD Next Level பட கதாபாத்திர போஸ்டர்..! கொண்டாடி வரும் ரசிகர்கள்..!

ஜோரா கைய தட்டுங்க - வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் யோகி பாபு. இதில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் மே 3ம் தேதி வெளியாகிறது.

இந்த மூன்று படங்களும் காமெடி நடிகர்களின் படம் என்பதால் எந்த படம் வசூலில் முன்னுக்கு வரப்போகிறது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வெளியானது நடிகர் யோகிபாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!