பாலிவுட் திரையுலகில் ஸ்ரீதேவியின் மகளாக அறிமுகமான ஜான்வி கபூர், தனது அழகு, நவீன மின்னல் தோற்றம், நுட்பமான நடிப்புத் திறமை ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில், தென்னிந்திய திரையுலகிற்குள் ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி, தற்போது அடுத்த அசத்தலான பட வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு முன் அமெரிக்காவில்...! அதிரடியாக வெளியாக இருக்கிறது ரஜினியின் "கூலி"...!

அந்த படத்தில் தான், ராம் சரண் நடிக்கிறார். இவர்களது நடிப்பில் வெளியாகவுள்ள ‘பெத்தி’ திரைப்படம் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்குவதால், இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக, அவர் இயக்கிய ‘உப்பெனா’ திரைப்படம் வெற்றிகரமாக அமைந்ததோடு, கலாபாரம்பரிய பார்வையிலும் புகழ் பெற்றிருந்தது.

இப்போது அவர், மெகா ஸ்டார் குடும்பத்தைச் சேர்ந்த ராம் சரணுடன் கூட்டணி அமைக்கிறார் என்ற செய்தி திரையுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘தேவரா’ படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜோடியாக நடித்த ஜான்வி கபூர், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அந்த படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த ஜான்வி,

தற்போது அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

அதன்படி, 'தேவரா' திரைப்படத்திற்காக ஜான்வி ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் ‘பெத்தி’ திரைப்படத்திற்காக, ரூ. 6 கோடி சம்பளமாக அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: எக்ஸ் தளம் மூலமாக காதலை பரிமாறிய சினிமா ஜோடிகள்..! சைலண்டாக வேடிக்கை பார்க்கும் நெட்டிசன்கள்..!