தெலுங்கு திரையுலகில் மட்டுமல்ல, இந்திய திரைத்துறையையே கலக்கி வரும் ஜோடி என்றால் அவர்கள் தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் திரையுலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இருக்கிறார்களா? என்பது கடந்த சில ஆண்டுகளாக இணையத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான கேள்வியாகவே இருக்கிறது. இப்படி இருவரும் இதுவரை தங்களது உறவை வெளிப்படையாக உறுதிபடுத்தவில்லை, ஆனால், அவர்களது செயல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நடக்கும் பரிமாற்றங்கள், ரசிகர்களிடையே அந்த காதல் வதந்தியை இன்னும் வலுப்படுத்தி வருகிறது.
சமீபத்தில், மும்பை நகரில் இருவரும் ஒரே காரில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்ததும், மீண்டும் இவர்களது காதல் விவகாரம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா மிகவும் இயல்பாக பேசிக்கொண்டு இருந்தனர், அவர்களுடன் இருக்கும் கம்ஃபர்ட் லெவல், ரசிகர்களின் கண்களில் ஒரு ‘க்யூட் கப்பிள் கோல்ஸ்’ எனத் தெரிய வந்தது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் திவாரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிங்டம்' திரைப்படம் வரும் ஜூலை 31-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "31-ம் தேதிக்காக காத்திருக்க முடியவில்லை..! நீங்கள் மூவரும் மேதைகள் – விஜய் தேவரகொண்டா, கவுதம், அனிருத். நீங்கள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய 'கிங்டம்' படத்தை பார்ப்பதற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்..!" என பதிவிட்டுள்ளார். அவரது இந்த உருக்கமான மற்றும் உற்சாகத்துடன் கூடிய பதிவு, ரசிகர்களிடையே மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகாவின் இந்த பதிவிற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா தனது X பக்கத்தில், மிகவும் எளிமையான பதில் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "இதை அனுபவியுங்கள் – கிங்டம்." என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிரடியாக பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தன்னா..! புதிய பிராண்ட் அறிமுகம்.. விஜய் தேவரகொண்டா வாழ்த்து..!
அவரது இந்த பதில், சற்று நேர்மையானது மட்டுமல்ல, ராஷ்மிகாவிற்காக தனியாக பதில் அளித்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு பெரிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இப்படி இவர்கள் இருவரது இந்த சமூக வலைதள பரிமாற்றங்கள், ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது. பலர், "இருவரும் ஒரே வீட்டில் இருப்பது போலவே, ஒரே நிமிடத்தில் ட்வீட் போடுறாங்களே" எனவும் "இந்த ஜோடியை விரைவில் திருமண கோலத்தில் காண வேண்டும்" எனவும் கூறிவருகின்றனர். இப்படி இருக்க 'கிங்டம்' திரைப்படம், விஜய் தேவரகொண்டாவிற்கு புதிய வகை கதாபாத்திரமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் அடுக்கடுக்கான உணர்வுகள், அதிகாரம், வன்முறை, தியாகம் ஆகியவற்றை கலந்துரைத்த ஒரு வலிமையான படைப்பாக உருவாகியிருக்கும் இந்த படம், இசையமைப்பாளர் அனிருத் இசையுடன் கூட இன்னும் ஒரு உயரத்துக்கு உயர்ந்துள்ளது. மேலும் கவுதம் திவாரா இயக்கத்தில், இந்த படம் பான் இந்தியா ரிலீஸாகவுள்ளதாலும், தென்னிந்திய மட்டுமல்லாது ஹிந்தி பேசும் ரசிகர்களிடமிருந்தும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் சினிமாவில் தங்கள் திறமையை நிரூபித்து வந்துள்ளதோடு, தற்போது தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது விருப்பமும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. இருவரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இருவரின் நட்பு, நெருக்கம், மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இனிமையான உரையாடல்கள், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே “விஜ்ஷ்மிகா” என்ற பெயரில் தனி கதையை உருவாகச் செய்துள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன்..! நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்..!