2025ம் ஆண்டில் ஆறு மாதங்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ் திரையுலகம் சினிமாவில் பல அதிரடி மாற்றங்களை கண்டுவருகிறது. குறிப்பாக ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் பார்த்தால் சுமார் 120க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறதாம். இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்க தற்போது வரும் வாரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 11 திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அதுவும் ஜூலை 18ம் தேதி இந்த அனைத்து படங்களும் வெளியாக இருப்பதாக சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அப்படி என்ன படங்கள் இந்த வாரம் ரிலீஸாக இருக்கிறது என பார்ப்போமா..

1. ஆக்நேயா : இயக்குனர் ஷிவா ரமேஷ் இயக்கத்தில் விஷ்ணு கிருஷ்ணா நடிப்பில் சமூக அரசியல் பின்னணியில் நடக்கும், ஒரு கிராமத்து இளைஞனின் போராட்ட கதையாக இப்படம் உருவாகியுள்ளதாம்.
2. ஆக்கிரமிப்பு : இயக்குநர் சஞ்சய் கிருஷ்ணன் இயக்கத்தில் திரையுலகில் புதுமையான விஷயங்களைத் தோற்றுவிக்க முயற்சிக்கும் த்ரில்லர் படமாம்.
3. பன் பட்டர் ஜாம் : ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த கதையில் கதாநாயகனாக கார்த்திக் சுந்தர் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
4. சென்ட்ரல் : ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஒரு காவல் நிலையத்தை மையமாகக் கொண்ட, சமூகப் பிரச்சனைகளை பிரதிபலிக்கும் கதையாம்.
5. கெவி : இயக்குநர் கவிதா ரமேஷ் இயக்கத்தில் ஒரு பெண்மணி தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அதனை தைரியமாக எதிர்கொள்ளும் விதத்தில் உருவான கதை.
6. ஜென்ம நட்சத்திரம் : ஜோதிடத்துக்கு முக்கியத்துவம் தரும் ஒரு குடும்ப டிராமாவாக இப்படம் பார்க்கப்படுகிறது.
7. களம் புதிது : பிரவின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், கிராமத்து விவசாய வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவானது. அனால் இப்படத்தில் புதிய தலைமுறையினரின் பார்வை விவசாயி மீது எப்படி உள்ளது என்பதை காண்பிக்கும் வகையில் உள்ளது.
8. நாளை நமதே : இயக்குநர் ராஜா சிவன் இயக்கியுள்ள இப்படம், மாணவர்கள், வேலைவாய்ப்பு, சமூக நீதியைக் குறித்த ஒரு விழிப்புணர்வு படமாக பார்க்கப்படுகிறது.
9. டைட்டானிக் : இன்று பலரது கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ள இப்படம், காதல் மற்றும் துயரக் கதை சார்ந்தது. குறிப்பாக இன்றைய தலைமுறையின் காதல் லீலைகளை சொல்லும் படமாக உள்ளது.
10. டிரெண்டிங் : சமூக வலைதளங்கள், பணம் சம்பாரித்து, பிரபலமாவது ஆகியவைகளின் அடிப்படை கொண்டு உருவான அட்டகாசமான திரைப்படம்.
11. யாதும் அறியான் : வாழ்க்கையில் தேடலுக்கு தயங்காத ஒருவரின் வாழ்க்கையை அழகாக பிரதிபலிக்கும் கதையாக இப்படம் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'தளபதி' இடத்தை பிடித்த 'குட்டி தளபதி'..! சினிமாவில் விஜய் பெற்ற சம்பளத்தை தன்வசப்படுத்திய நடிகர் 'SK'..!
இப்படி 11 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறதா என பார்த்தால், இதில் எந்த படம் பெரிய நடிகர்களுடனோ, மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ உருவாக்கிய படங்கள் இல்லை. பெரும்பாலும் இத்-திரைப்படங்கள், புதிய இயக்குநர்கள், புதிய நடிகர்கள், அல்லது சுய தயாரிப்பாளர்களின் முயற்சிகளாக இருக்கின்றன. இந்த சூழலில், ஒரே நாளில் 2, 3 பெரிய படங்கள் வெளியானாலும், அவைகளுக்கான தியேட்டர் விநியோகம், மாபெரும் முத்திரையை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்படுகிறது. ஆனால் இப்பொழுது, ஒரே வாரத்தில் 11 திரைப்படங்கள் என்றால், ஒரு நாளைக்கு ஒரு படம் என ரிலீஸ் செய்தாலும் 11 நாட்கள் தேவைப்படும். இதற்கு இடையே ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பெரிய ஹீரோ படங்கள், பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் தரும் படங்களும் இருப்பதால் இந்த படங்கள் ஜெயிப்பது சவாலாகவே இருக்கும். மேலும், பெரிய படங்களை விட சிறிய படங்கள் தான் சமீபத்தில் எதிர்பாராத வெற்றிகளை பெற்றிருக்கின்றன.

உதாரணமாக, “குட் நைட்”, “ப்ளூ ஸ்டார்”,"3bhk","பறந்துபோ","குடும்பஸ்தன்","மாமன்" போன்ற படங்கள், பிரபல நடிகர்கள் இல்லாமலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் இந்த மாதிரி ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவது, மகிழ்ச்சியாக இருந்தாலும், அதில் பெரும்பாலான படங்கள் 'சுவடு தெரியாமல்' மாயமாகும் அபாயமும் அதிகமாகவே உள்ளன. எனவே இனிமேலும், ஒரே வாரத்தில் அதிகப்படியான திரைப்படங்களை அனுமதிப்பதை தவிர்த்து, சரியான திட்டமிடலுடன் படத்தை வெளியிட வேண்டும் என சினிமா ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கும் இயக்குநருக்கும் நடந்த சண்டை இதுதான்..! விழாவில் போட்டுடைத்த மக்கள் செல்வன்..!