தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த ஒரு கனவு நிஜமாக இருக்கிறது. அதாவது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் ஒரே படத்தில் சேரும் தருணம், தற்போது உறுதியாகியுள்ளது.
இது தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மாற்றம் ஏற்படுத்தும் நிகழ்வாகும். இந்த முக்கியமான அறிவிப்பு கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களிலும், சினிமா ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்குத் தொடர்ந்து, இதுவரை உறுதியாகாத தகவல்களுக்கு சமீபத்தில் நடந்த SIIMA விருது விழா அதாவது South Indian International Movie Awards விழாவில் நடிகர் கமல்ஹாசன் தாமாகவே முடிவுக்கு கட்டுப்பட்டு, உறுதியான தகவல்களை வழங்கியுள்ளார். அதில் இந்தப் படத்தை, தற்போதைய தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார். அவர் ஏற்கனவே ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு விசேஷமான அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். ‘கூலி’ படத்தில் தற்போது ரஜினிகாந்துடன் பணியாற்றி இருந்த லோகேஷ், அடுத்த படத்தில் ரஜினி-கமல் இருவரையும் இணைத்து, மிகவும் வித்தியாசமான ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளார் என்பது உறுதியான செய்தியாக உள்ளது. இப்படி இருக்க SIIMA விருது விழாவில் பேசும் போது கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் பணியாற்றும் திட்டம் குறித்து நேரடியாக கூறினார்.

அதன்படி அவர் பேசுகையில், "நாங்கள் இருவரும் இணைகிறோம். எங்களுக்கு போட்டி கிடையாது. நீங்கள் (மக்கள் மற்றும் ஊடகம்) உருவாக்கினது தான் அந்த போட்டி. ஆனால், உண்மையில் நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. நாங்கள் கூட்டாளிகள்.. இது தரமான சம்பவமா என்று கேட்கிறீர்கள். படம் வந்த பிறகு பாருங்கள். பிடித்திருந்தால் மகிழ்ச்சி, பிடிக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வோம்" எனவும் அவர் கூறினார். அதே நேரத்தில், "திடீர்னு தரதரனு கூட இழுத்துடுவோம்," என்ற எச்சரிக்கையுடன் தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழ் சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: உங்களுக்கு ஏன் தேசிய விருது என கேட்ட கமல்ஹாசன்..! ஷாக்கிங் பதில் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர்..!
இருவரும் 1980களில் கடைசியாக இணைந்தது "நினைத்தாலே இனிக்கும்" மற்றும் "16 வயதினிலே" போன்ற சில படங்களில் தான். அதற்குப் பிறகு இருவரும் தனித்தனி பாதையில் சென்றாலும், இருவருக்குமான மரியாதை, நட்பு எப்போதும் நிலைத்திருக்கின்றது. இப்போது வரை, இந்த புதிய படத்தின் தலைப்பு, கதைக்களம், பிற நடிகர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், “கூலி” படத்துக்குப் பிறகு, லோகேஷ் இதை தொடங்குவார் என்ற தகவல் வருகிறதைப் பொருட்படுத்தினால், 2026-ல் இந்த படம் வெளியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்க திறன் என்பது, பல கதாபாத்திரங்களை ஒன்றோடொன்று சேர்த்து ஒரு உலகத்தை உருவாக்குவது. இதே வழியில், இந்த புதிய படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்-ல் ஒரு பகுதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒரே படத்தில் இணைவது என்பது, ஒரு சந்ததிக்கு ஒரு மாபெரும் பரிசாகும். இது வெறும் ஒரு படம் அல்ல, அது தமிழ் சினிமாவின் ஒரு வரலாற்று நிகழ்வு. இருவரும் இணைந்து வருவதை பார்ப்பது என்பது, சினிமாவின் மீது கொண்ட காதலுக்கான விழாவாகும்.
இதையும் படிங்க: இந்திய சினிமாவில் 66 ஆண்டுகள் ஒளிரும் கமல்ஹாசன்..! இணையத்தை கலக்கும் ரசிகர்கள்..!