பிரபல நகைச்சுவை நடிகை, பாடகி, பாடலாசிரியர் மற்றும் நடிகை என பன்முகப்பாடுகளை வெற்றிகரமாக ஏந்தி வருபவர் கேத்தரீன் ரியான். இப்படியாக தனது கரியரில், வெவ்வேறு தளங்களில் திறமையாக செயல்பட்டு, பாராட்டுகளை பெற்றிருக்கும் இவர், சமீபத்தில் ஒரு பழைய நேர்காணலின் அடிப்படையில் மீண்டும் பரபரப்பான விவாதங்களை கிளப்பியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல பத்திரிகையாளர் லூயிஸ் தெராக்ஸ் அவர்களுக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் கேத்தரீன் கூறிய விஷயம் தற்போது மீண்டும் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அந்த நேர்காணலில் கேத்தரீன், தனது 25வது வயதில், பணிபுரிந்த அலுவலகத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றை மிக நேர்மையாக பகிர்ந்தார். அந்த நேர்காணலில் லூயிஸ், “நீங்கள் ஒருமுறை உங்கள் அலுவலக பாஸுடன் உறவில் ஈடுபட்டதாக கூறினீர்கள் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு கேத்தரீன் தயக்கமின்றி “ஆம், அது உண்மைதான்” என உறுதி செய்தார். அவர் பேசுகையில், “அன்று எனக்கு வீட்டுக்குச் சீக்கிரம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக என் பாஸிடம் நேரடியாகவே கேட்டேன். ‘நான் உங்களுடன் உறவில் ஈடுபட்டால், என்னை சீக்கிரமாக வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கிறீர்களா?’ என. இது ஆச்சர்யமாக இருந்தாலும், நான் அவரை விரும்பினேன் என்பதே முக்கிய விஷயம். இது கட்டாயத்தில் அல்ல, என் விருப்பத்தில் ஏற்பட்ட சம்பவம்” என்றார். இது கேட்ட உடனே லூயிஸ் அதிர்ச்சி அடைந்தார். பின் “நீங்கள் உண்மையிலேயே இப்படிச் சொன்னீர்களா?” என்ற கேள்விக்கு, கேத்தரீன்: “ஆம், நிச்சயமாக சொன்னேன். அவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் யாரோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ஒருவர் இல்லை” என்று கூறினார். இதற்குப் பிறகு, “பாஸ் என்ன பதிலளித்தார்?” என்ற லூயிசின் கேள்விக்கு, “நிச்சயம் முடியும்” என்று கூறி அவர் ஆவலை தூண்டினார்.

பின்னர் அந்த உறவு நடந்ததோடு, நான் வீட்டுக்குப் போனேன்” என்று பதிலளித்தார் கேத்தரீன். அது மட்டுமல்ல, இந்த நேர்காணலில் கேத்தரீன் மேலும் அதிர்ச்சியளிக்கும்படி கூறியது என்னவென்றால், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த சில பெண்களும் இந்த மாதிரியான அணுகுமுறையை எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால், இது அங்கு உள்ள பெண்கள் அனைவரும் விரும்பியதால் தான் நடந்ததாக அவர் கூறினார். இந்த இடத்தில் லூயிஸ், “அந்த பெண்களில் சிலர் உங்கள் போல விருப்பமின்றி இருந்திருந்தால்? அவர்களுக்கு இது ஒரு திணிப்பு போல் தெரியவில்லையா?” எனக் கேட்டார். அதற்கு கேத்தரீன், “பாஸ் ஒருபோதும் இதை யாரிடமும் முன் வைக்கவில்லை. இது அவருடைய விருப்பம் அல்ல. இது என் விருப்பம். அவர் மீது ஈர்ப்பு இருந்ததால் நடந்தது” எனத் தெரிவித்தார். இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: மிரள வைக்கும் “ஓ காட் பியூட்டிபுல்”..! வெளியானது படத்தின் செகண்ட் சிங்கிள்..!
இதனுடன், கேத்தரீனின் அந்த வெளிப்பாடுகள் மீண்டும் பார்வைக்கு வந்துள்ளன. இப்படி இருக்க கேத்தரீன், கனடாவில் பிறந்து வளர்ந்தவர். தனது நகைச்சுவை மற்றும் கம்பீரமான மேடை நிகழ்ச்சிகளால் பிரபலமானவர். பாலியல் மற்றும் உறவுகள் பற்றிய சுய அனுபவங்களைக் கொண்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதில் அவரது பாணி தனித்துவமானது. அவருடைய இந்த நேர்காணல் வாயிலாக, மீடியா துறையிலும், அலுவலக பணியிட சூழ்நிலையிலும் உள்ள அதிகாரம், விருப்பம் மற்றும் விருப்பத்தின்மையின் நடுக்கோட்டை மீதான விவாதம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், கேத்தரீன் தொடர்ந்து கூறுவது என்னவெனில் “அந்த உறவு என் விருப்பத்தினால் தான். நான் அவரை விரும்பினேன். அவர் என்னை கட்டாயப்படுத்தவில்லை. எனவே இது தவறு என நான் காணவில்லை” என்றார். ஆனால் பலர், அதிகாரி மற்றும் தொழிலாளர் உறவில், சக்தி சமநிலை இல்லாத சூழ்நிலையில், விருப்பம் என்றும் சொல்ல முடியாது என்று வாதாடுகின்றனர்.

முடிவாக, கேத்தரீன் ரியான் தனது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்ததன் மூலம் ஒரு முக்கியமான சமூக விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறார். அவர் சொல்வது ஒரு தனி மனிதரின் அனுபவமாக இருந்தாலும், அதைச் சுற்றி இருக்கும் பார்வைகள் மற்றும் கருத்துகள், எங்கள் சமூகத்தின் மதிப்பீடு, நீதிநடைமுறை மற்றும் பணியிட ஒழுங்குகள் குறித்து நம்மை சிந்திக்க வைக்கின்றன.
இதையும் படிங்க: அதிரடியாக வெளியானது 'ஆர்யன்' பட ரீலிஸ் அப்டேட்..! விஷ்ணு விஷால் ரசிகர்கள் ஹாப்பி..!